கருணாநிதியை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு
சென்னை:
வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை மத்தியசிறையிலிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க சென்ற அவரதுஉறவினர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அவர்கள் அனைவரும் சிறைவாசலிலேயே காத்து நிற்கின்றனர்.
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுதி.மு.க.தலைவர் கருணாநிதியை போலீசார் கைது செய்தனர். அவரை அடுத்தமாதம்10ம் தேதிவரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் சென்னை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முரசொலிமாறனின் தம்பி முரசொலி செல்வம், சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறனின்மனைவி காவேரி, அவர்களது மகள், கருணாநிதியின் மகள் செல்வி வயிற்று பேத்தி ஆகியோர்கருணாநிதியை சந்திப்பதற்காக சென்னை மத்திய சிறைக்கு சென்றனர்.
ஆனால் போலீசார் கருணாநிதியை சந்திப்பதற்கு அவர்களுக்குஅனுமதியளிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்னமும் சிறைவாசலிலேயே காத்திருக்கிறார்கள்.
சிறைவாசலிலிருந்த நிருபர்கள் அவர்களிடம் கருணாநிதி கைது செய்யப்பட்டபோதுஎன்ன நடந்தது என கேட்டனர். அவர்கள் பதிலளிக்கையில்
போலீசார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்.எங்கள் வீட்டிலுள்ள படுக்கைஅறைக்குள்ளும் அத்துமீறி நுழைந்தனர். வீட்டிலிருந்த பெண்களின் கையை பிடித்துஇழுத்தனர்.பெண்களிடம் மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டனர். எங்களுக்குவீட்டிற்கு செல்லவே பயமாக இருக்கிறது.
பெண்ணின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வரவாக்களித்த பெண்கள்தான் இதற்கு பொறுப்பு என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications