பெங்களூர்-தமிழ்நாடு பஸ் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பெங்களூர்:
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள்காரணமாக, கர்நாடகா-தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே பஸ் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
காவேரிப்பட்டணத்திலும் ஓசூரிலும் கர்நாடகா போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 2 பஸ்கள் சனிக்கிழமை கல்வீச்சில்சேதமடந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலுள்ள பல ஊர்களுக்கும் செல்ல வேண்டிய கர்நாடக பஸ்கள் எதுவும்இயக்கப்படவில்லை.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கருணாநிதி கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் பயங்கர வன்முறைவெடித்தது. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடைபெற்றது. பல பஸ்கள் எரிக்கப்பட்டன. பெங்களூருக்குவந்த சில பஸ்களும் லாரிகளும் கூட, கண்ணாடி உடைந்த நிலையில் வந்ததாகவும் பார்த்தவர்கள் கூறினார்கள்.
இதைக் கேள்விப்பட்டதும், தமிழ்நாட்டிலுள்ள பல ஊர்களுக்கும் செல்லும் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தபஸ்கள் அனைத்தும் கேன்சல் செய்யப்பட்டு விட்டன என்று இப்போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறினார்.
இவை தவிர, தனியார் பஸ் கம்பெனிகளும் தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டிய பஸ்கள் அனைத்தையும் கேன்சல் செய்துவிட்டன.டிக்கெட்டுகள் அனைத்தும் கேன்சல் செய்யப்பட்டு, பயணிகளுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டன இந்த தனியார் பஸ்கம்பெனிகள்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாடு வழியாக கேரளாவுக்குச் செல்லும் பஸ்களும் கேன்சல் செய்யப்பட்டு விட்டன என்றுசில தனியார் பஸ் கம்பெனிகளைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். ஓசூரைத் தாண்டி எந்த பஸ்ஸும் ஓடவில்லை; ஓடவும் முடியாதுஎன்றும் அவர்கள் கூறினார்கள்.
2 மாநிலங்களுக்குமிடையே நாள்தோறும் 30,000 முதல் 40,000 பயணிகள் வரை பயணம் செய்கிறார்கள்.
இந்நிலையில், தமிழகத்தின் தேசிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகள், திங்கள்கிழமை முழு பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.பந்த் முடிந்தாலும், தமிழகம் முழுவதும் நிலைமை சீரான பிறகே பஸ் போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகும் என்றும் கர்நாடகஅரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி கூறினார்.
ஆனால் இந்த 2 மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தில் எந்த விதமான பாதிப்பும் இல்லை; மாற்றங்களும்இல்லை. எல்லா ரயில்களும் வழக்கம் போல ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், பஸ்கள் அனைத்தும் கேன்சல் செய்யப்பட்டுவிட்டதால், ரயில்களில் கூட்டம் அலைமோதுவதாகவும் கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications