தொண்டர்களை விடுவிக்க பிரதமரிடம் திமுக எம்.பிக்கள் கோரிக்கை
டெல்லி:
தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 50,000 தி.மு.க. தொண்டர்களை உடனடியாக விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என 4தி.மு.க. எம்.பிக்கள் குழு பிரதமர் வாஜ்பாயை கேட்டுக் கொண்டது.
தி.மு.க. எம்.பிக்கள் பி.என்.சிவா, ஏ.ராஜா, சி குப்புசாமி மற்றும் வி.பி.துரைசாமி ஆகியோர் பிரதமர் வாஜ்பாயிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை அறைகள்நிரம்பி வழிவதால் இவர்கள் அனைவரும் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழக அரசு, 30ம் தேதியன்று 23,000 தி.மு.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர் என கூறியிருந்தது. ஆனால் அது தவறு. 50,000க்கும்அதிகமான தி.மு.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
சிறையில் உள்ள தி.மு.க. தொண்டர்களுக்கு உணவோ, நீரோ கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு கழிப்பறை வசதி கூட இல்லை. இதனால்தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
அரசியல் தொண்டர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாகவிடுதலை செய்யப்பட வேண்டும் என்று வாஜ்பாயிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications