கருணாநிதிக்கு மினரல் வாட்டர் தரக் கூட தடை
சென்னை:
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி தோள்பட்டை, மூட்டு வலியுடன்அவதிப்பட்டு வருகிறார்.
அவருக்கு மினரல் பாட்டில் நீர் வழங்கக் கூட அனுமதியளிக்கப்படவில்லை.
அவரை செவ்வாய்க்கிழமை சிறையில் சந்தித்துவிட்டு வந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் பா.ம.க. தலைவர் தீரன் ஆகியோர் நிருபர்களிடம்பேசினர்.
அவர்கள் கூறுகையில், நாங்கள் கருணாநிதிக்கு வழங்குவதற்காக ஒரே ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை கொண்டுசென்றோம். ஆனால், இதை கருணாநிதிக்கு வழங்க சட்டத்தில் இடமில்லை எனக் கூறி போலீசார் அதை பறித்துக்கொண்டனர்.
கடும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார் கருணாநிதி. அவரை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கூறினோம். ஆனால், ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் அடிபட்டு சிறையில் வாடும்போதுதனக்கு மட்டும் சிகிச்சை தேவையில்லை எனக் கூறிவிட்டார்.
கருணாநிதி வருத்தப்பட்டு சொன்ன ஒரு விஷயம் காவல்துறையினரின் அடாவடி தான். எனத் ஆட்சியில் அரசுப்பணியாளர்களில் காவல்துறையினருக்குத் தான் நிறைய செய்தேன். ஆனால், அவர்கள் என்னிடமே இப்படி நடந்துகொண்டனர் என வருத்தப்பட்டு சொன்னார் என்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications