வேலூரில் 3,000 திமுக தொண்டர்கள் விடுதலை
வேலூர்:
தமிழகத்தில் திங்கள்கிழமை நடந்த முழு அடைப்பையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர்சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3, 000 திமுக தொண்டர்கள் திங்கள்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து, இழுத்துச்செல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதையொட்டி, தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட முக்கிய நகரங்களில் திமுக தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பந்த் முடிவடைந்ததையடுத்து மாநிலம் முழுவதும் சிறையில்அடைக்கப்பட்டிருந்த திமுக தொண்டர்களை சம்பந்தப்பட்ட போலீஸார் விடுதலை செய்து வருகின்றனர்.
முன்னதாக, கருணாநிதி கைது செய்யப்படும்போது, அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததுதொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறனும்,டி.ஆர்.பாலுவும் தங்கள் மேல் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்றால்தான் சிறையிலிருந்துவெளியேறுவோம் என்று பிடிவாதமாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கருணாநிதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல்செய்யப்படும் என்று தெரிகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications