நாளை சந்திர கிரகணம்
இந்த ஆண்டின் (2001) முதல் சந்திர கிரகணம் நாளை ( 05.07.2001) நிகழ இருக்கிறது.
இந்த ஆண்டு 2 சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் சூரிய கிரகணம் சென்ற மாதம் (21.06.2001) நிகழ்ந்தது. இது இந்தியாவில் தெரியவில்லை.
அடுத்த சூரியகிரகணம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி (14.12.2001) நிகழ உள்ளது. இதுவும் இந்தியாவில் தெரியாது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. இது இந்தியாவில் தெரியும்.
இரண்டாவது சந்திர கிரகணம் இந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 30ம் தேதி (30.12.2001) நிகழ உள்ளது. ஆனால், இது இந்தியாவில் தெரியாது.
சூரியன், பூமி, நிலா ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதுதான் சந்திர கிரகணம். சந்திர கிரகணம் பவுர்ணமியின்போதுதான் நிகழும். சூரிய கிரகணம் அமாவாசையின் போது நிகழும்.
இந்த சந்திர கிரகணம் நிகழும் நேரம்: (இந்திய நேரப்படி)
ஸ்பர்சம் (சந்திரனின் ஒளி குறைய ஆரம்பிக்கும் நேரம்)- மாலை 5.40 மணி
கிரகணம் ஆரம்பம்- இரவு 7.04 மணி
மத்திமம் (கிரகணத்தின் மத்தியப் பகுதி)- இரவு 8.24 மணி
முடிவு- இரவு 9.45 மணி
மோட்சம்: இரவு 11.09 மணி
கிட்டத்தட்ட 5 மணி நேரம் இந்த கிரகணம் நீடிக்கும்.
ஸ்பர்சம் என்றால் கிரகணத்தின் ஆரம்ப நிலைக்கு முற்பட்ட நிலை. அந்த நேரம் முதலே சந்திரனின் ஒளி குறைய ஆரம்பித்துவிடும்.
முழுவதுமாக பூமியின் நிழல் சந்திரன் மீது விழ ஆரம்பிக்கும் நேரம் இரவு 7.04 மணிக்குத்தான்.
மத்திமம் என்பது சந்திர கிரகணத்தின் நடு பகுதி.
சந்திர கிரகணம் இரவு 9.45 மணிக்கு முடிவடைகிறது.இப்போது பூமி சந்திரனின் பாதையிலிருந்து விலகி விடுவதால். பூமியின் நிழல் சந்திரனின் மீதிலிருந்துபூரணமாக விலகிவிடும்.
மோட்சம் இரவு 11.09 மணி. அதாவது மீண்டும் சந்திரன் ஒளி பெற ஆரம்பிக்கும் நேரம்.
இது குறித்து காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் புராணக்கதையும் உண்டு. அது:
சந்திரன் அவர் செய்த பாவ காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரை பிடித்து அவரை முடமாக்கநினைக்கிறார்
ஆனால் சந்திரன் பகவானை பிரார்தித்து ஸ்லோகங்கள் சொல்ல, இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது எனகூறப்படுகிறது.
இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனை பிரார்த்தித்து வந்தால் நாம் செய்த பாவங்கள் தீரும், இறைவனின் அருள் கிடைக்கும் என்பதுநம்பிக்கை.
கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் என புராணங்கள் கூறுகிறது. ஆனால், கிரகணத்தின்போது வெளியாகும் மிகபலமான கதிர்வீச்சு கர்ப்பத்தில் உள்ள சிசுக்களை பாதிக்கும் என்பதால் தான் அவர்கள் அந்த நேரத்தில் வெளியே வருவது நல்லதல்ல எனவிஞ்ஞானப்பூர்வமாகவும் கூறப்படுகிறது.
இந்த கிரகணம் மூலம், பூராடம், உத்திராடம், பரணி, பூசம் ஆகிய நட்சத்திரங்களில் பிடிப்பதால் இவர்கள் வியாழக்கிழமை காலையோ, கிரகணம்பிடிக்கும் முன்போ கோவில்களில் அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யலாம்.
இயலாதவர்கள் வீட்டில் பூஜை செய்து இஷ்ட தெய்வத்தை வணங்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications