கருணாநிதிக்கு கழுத்துவலி: குடும்ப டாக்டர் கோபால்
சென்னை:
கருணாநிதிக்குக் கழுத்து வலி ஏற்பட்டிருப்பதாக அவருடைய குடும்ப டாக்டர் கோபால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளகருணாநிதியின் கழுத்தை அரசு பொதுமருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
இதையடுத்து கருணாநிதியை சென்னை மத்திய சிறைக்குச் சென்று சந்தித்தார் அவருடைய குடும்ப டாக்டர் கோபால்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. அவரால் நடக்க முடியவில்லை. இரு கால்களும் வீங்கியுள்ளன.தோளில் அதிக வலி இருப்பதாகக் கருணாநிதி கூறினார். தோள்பட்டை வலியைப் போக்குவதற்காக எந்தசிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை.
அரசு டாக்டர்கள் சிறைக்குள்ளேயே கருணாநிதிக்கு போர்ட்டபிள் எக்ஸரே கருவி மூலம் சிகிச்சை அளித்தனர்.வலது தோள்பட்டை வலிக்காக அரசு மருத்துவர்கள் அவருக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளித்தனர்.
அவரது உடல்நிலை குறித்து அவரது குடும்ப டாக்டராகிய எனக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் அவரதுஉடல்நிலையைப் பரிசோதிக்க எனக்கு அனுமதி கொடுக்கவில்லை.
அரசு மருத்துவக் குழுதான் கருணாநிதியைப் பரிசோதித்தது. அந்தக் குழுவில் என்னையும் இடம்பெறச் செய்யவேண்டும் என்றார் டாக்டர் கோபால்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications