தொண்டர்கள் தயவால் தான் விடுதலையானேன்- கருணாநிதி பேட்டி
சென்னை:
ஜெயலலிதா தயவால் நான் விடுதலையாகவில்லை. தொண்டர்கள் தயவால் தான் விடுதலையானேன் எனசிறையிலிருந்து வெளியே வந்த கருணாநிதி கூறினார்.
கருணாநிதி புதன்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டார். அவர் வீல் சேரில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
கருணாநிதியை விடுவிக்க முடிவெடுத்த ஜெயலலிதா இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை புதன்கிழமைகாலையில் துவக்கினார். சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் குமாரிடம் இது தொடர்பாக போலீஸ்தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கருணாநிதியை விடுவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை உடனடியாக விடுவித்துநீதிபதி அசோக் குமார் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை நீதிமன்ற அதிகாரிகள் சிறைத்துறைஅதிகாரிகளிடம் மாலையில் வழங்கினர்.
இதையடுத்து கருணாநிதி உடனடியாக விடுவிக்கப்பட்டார்.
மிகவும் தளர்ந்து போய் காணப்பட்ட கருணாநிதி வீல் சேரில் மூலம் தான் வெளியே கொண்டு வரப்பட்டார்.
கருணாநிதி விடுதலையாகிறார் என்று தெரிந்தவுடன் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும், பொது மக்களும்,பத்திரிக்கையாளர்களும் சென்னை மத்திய சிறை அருகே கூடினர்.
இதையடுத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
மிகுந்த பரபரப்புக்கிடையே கருணாநிதி சிறையிலிருந்து வெளியே வந்தார். அவரை ஜீப்பில் காத்திருந்த மத்தியஅமைச்சர் முரசொலி மாறன் வரவேற்றார். தொண்டர்கள் கருணாநிதிக்கு ஆதரவாகவும் ஜெயலலிதாவுக்குஎதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தனது ஆலிவர் ரோடு இல்லத்திலிருந்து அவரை போலீசார் முரட்டுத்தனமாகஅடித்து இழுத்துச் சென்றனர். இதைத் தடுத்த மாறனும், மாறனுக்கு ஆதரவாக பேசிய மத்திய அமைச்சர் பாலுவும்,ஸ்டாலினும் கூட அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
4 நாட்கள் சிறையில்:
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து புதன்கிழமை மாலை வரை அவர் 4 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்கருணாநிதி.
வழக்கு வாபஸ் இல்லை:
முன்னதாக கருணாநிதியை அவரது வயதின் காரணமாக மனிதாபமான அடிப்படையில் தான் விடுதலைசெய்வதாகவும் அவர் மீதான வழக்குகள் ஏதும் வாபஸ் பெறப்படாது எனவும் முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications