பாரிசில் ஜகன்நாதர் கோவில் தேர்த் திருவிழா

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வரும் ஞாயிற்றுக்கிழமைநடைபெற உள்ள ஜகன்நாதர் கோவிலின் தேர்த் திருவிழாவில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 ஆண்டுகளுக்கு முன் இந்த திருவிழா முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த திருவிழா அரசு சாரா அமைப்பினராலும், கலாசார அமைப்பினராலும் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும்இந்த விழாவில் ஐரோப்பியர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெற்று வருகிறார்கள்.

இந்த விழா ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது. திருவிழாவின் துவக்கத்தில் பாரம்பரிய பூஜை நடக்கும். அதன் பின்மாலை 3 மணிக்கு ஜகன்நாதரின் தேர் வீதிவலத்திற்கு கிளம்பும்.

பாரிசின் முக்கிய சதுக்கமான டி லா ரிபப்ளிக்காவில் இருந்து துவங்கும் இந்த தேர்வலம், பாரிசின் முக்கியமானபகுதிகள் வழியாக சென்று, 5 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்த பின் இரவு 7 மணிக்கு முடிவடையும். தேர் ஊர்வலம்வரும்போது தேருடன் பல நாட்டிய குழுவினரும் நடனமாடி வருவார்கள்.

தேர்த் திருவிழா முடிவடைந்தவுடன் 1 மணி நேரத்திற்கு இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் கார்பா,பங்காரா மற்றும் பல விதமான இந்திய நாட்டியங்கள் நடைபெறும்.

இந்த விழாவில் பிரான்சிற்கான இந்திய தூதர் கன்வால் சிபால், நேபாள் தூதர் இந்திரா பகதூர் சிங், மொரிசியஸ்தூதர் ராக்ஃப் புன்துன் மற்றும் யுனெஸ்கோவிற்கான இந்திய தூதர் நீலம் சாபர்வாலும் பங்கேற்பார்கள் என விழாகுழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரான்சில் வாழும் தமிழ் மக்களில், குறிப்பாக, இந்து மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இலங்கையையும்,இந்தியாவின் குஜராத் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+