தெ.ஆப்ரிக்கா: சாதனை படைத்த காது கேளா இந்திய பெண்கள்
டர்பன்:
காது கேட்காத 2 தென் ஆப்பிரிக்க இந்தியப் பெண்கள் காது கேளாதவர்களுக்கான ஆசிரியர் பட்டத்தைவென்றுள்ளனர்.
டி.வி.யில் காது கேளாதவர்களுக்கான செய்தியை அனைவரும் பார்த்திருக்கலாம். ஆனால், இந்தச் செய்திகளைசைகை மூலம் "வாசி"ப்பவர்களுக்குக் காது நன்றாகக் கேட்கும். ஆனால் வெறுமனே சைகையை மட்டும் காட்டினால்நம் எத்தனை பேருக்குப் புரியும்?
காது கேளாதவர்கள் படிப்பதற்கு என்ன பாடு படுகிறார்கள் என்று இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.ஆனால், இந்த 2 பெண்களும் காது கேளாமலேயே பட்டம் பெற்றுள்ளனர் என்றால், அது பெரும் சாதனைதானே?
விஜய்லட்சுமி கோவென்டர் மற்றும் ஆஷா உதிர் என்ற இந்த 2 பேரும் ஏற்கனவே வி.என். நாயக் என்ற பள்ளியில்ஆசிரியைகளாகத்தான் பணிபுரிந்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்கக் கல்லூரியில் அவர்கள் தற்போது இந்தஇளநிலை ஆசிரியர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.
காது கேளாதவர்கள் இந்தப் பட்டத்தைப் பெறுவது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயமில்லையாம்.ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டு, விளங்கிப் படிப்பதற்குள் அவர்களுக்குப் போதும் போதும்என்றாகி விடுமாம்.
ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை மீண்டும் இவர்களுக்குச் சொல்லி விளக்குவதற்கு இன்னொருவர் இடையில்இருப்பாராம். ஒருநாள் இந்த "இடை ஆசிரியர்" வராவிட்டாலும் போச்சு. அன்றைய படிப்பு கெட்டுவிடும். தினமும்இப்படித்தான் அவர்கள் சிரமத்துடன் பயின்று வந்தனராம்.
இப்படியே கஷ்டப்பட்டு படித்து, படித்துத்தான் இந்த 2 பேராலும் இந்தச் சாதனையைச் செய்ய முடிந்துள்ளது.பட்டம் கிடைத்ததில் இந்த 2 பேருக்கும் அவ்வளவு சந்தோஷமாம். இருக்காதே பின்னே? தென்ஆப்பிரிக்காவிலேயே காது கேளாதவர்கள் பட்டத்தை இவர்கள்தான் முதலில் பெறுகிறார்கள் என்றால் சந்தோஷம்பொங்கத்தானே செய்யும்?
ஆனால் பட்டம் பெற்றது கூட இவர்களுக்குச் சந்தோஷம் அளிக்கவில்லையாம். இந்த 2 தென் ஆப்பிரிக்கஇந்தியர்களும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இப்பதான் எங்களால் காது கேளாதவர்களுக்குத் தெளிவாகப்பாடம் கற்பிக்க முடியும் என்கிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications