இந்தியாவில் ஹோண்டாவின் புதிய கார் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா மோட்டார்ஸ் இந்தியாவில் , அக்கார்ட் என்ற புதிய சொகுசு காரைவியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.15 லட்சம்.

இந்திய கார் விற்பனை சந்தையில் "டி பிரிவின் கீழ் வருகிறது இந்தக் கார். ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.16 லட்சம்விலை வரையுள்ள கார்கள் டி பிரிவின் கீழ் வரும். சந்தையில் இந்தப் பிரிவில் முதலில் விற்பனைக்கு வந்திருக்கும்கார் "அக்கார்ட்".

ஹோண்டா நிறுவனம் தவிர, ஹுன்டாய் மோட்டார் மற்றும் ஃபோர்ட் இந்தியா நிறுவனங்களும் "டி" பிரிவில் புதியகார்களை அறிமுகப்படுத்த இருப்பதாகக் கூறியுள்ளன.

பயணிகளின் வசதிக்கு "அக்கார்ட்":

எங்களது முக்கிய தயாரிப்பான இந்த "அக்கார்ட்", உலகத் தரம் வாய்ந்த என்ஜினைக் கொண்து என ஹோண்டாஅறிவித்துள்ளது. பயணிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் கருத்தில்கொண்டுதான் இந்தக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகில் விற்கப்படும் கார்களிலேயே "அக்கார்ட்" கார்தான், இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பத்தைமுழுமையாகப் பூர்த்தி செய்யப் போகிறது என்கிறார் ஹோண்டா கம்பெனியின் நிர்வாக இயக்குனர் எஸ். தோஷிடா.

"சி" பிரிவு வாடிக்கையாளர்களுக்கேற்ற "அக்கார்ட்":

"சி பிரிவு வாடிக்கையாளர்களையும் கருத்தில் கொண்டுதான் "அக்கார்ட்" வடிவமைக்கப்பட்டுள்ளது. தாங்கள்பயன்படுத்தும் காரின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள்எண்ணத்தை நிச்சயமாக "அக்கார்ட்" பூர்த்தி செய்யும்.

எங்கள் முக்கிய தயாரிப்பான "அக்கார்ட்" கார் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்என்றே நம்புகிறோம். "அக்கார்ட்" கார் அமெரிக்காவிலும், ஜப்பானிலும் மிகப் பிரபலமாக விற்பனையாகிக்கொண்டிருக்கிறது என்றார் ஹோண்டா சியல் கார் நிறுவனத்தின் தலைவர் ஃபுஜிசாகி.

"அக்கார்ட்"-ன் இலக்கு:

ஹோண்டா அதிகாரிகள் கூறுகையில், மார்ச் 2002த்தில் முடிவடையும் நிதி ஆண்டில், இந்தியாவில் 2,500"அக்கார்ட்" கார்களை விற்பனை செய்ய முடியும் என நம்புகிறோம். "டி" பிரிவு வாடிக்கையாளர்களில், வருடத்திற்கு6,000 முதல் 7,000 பேர் "அக்கார்ட்" காரை வாங்குவார்கள் என நம்புகிறோம். மேலும், "அக்கார்ட்" கார்கள்வங்கதேசத்திற்கும், இலங்கைக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன என்றனர்.

ஹோண்டா நிறுவனம் 4.6 மில்லியன் செலவில் டெல்லியில் ஒரு தொழிற்சாலையை அமைத்து, 1997ம் ஆண்டுமுதல் சிட்டி மாடல் காரைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மார்ச் 2002க்குள் 11,000 சிட்டி மாடல் கார்களைவிற்பனை செய்ய எண்ணியிருக்கிறோம் என ஃபுஜிசாகி தெரிவித்தார்.

சென்ற ஆண்டு ஏப்ரல்-மே மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் கார் விற்பனையின் எண்ணிக்கை7.5 சதவிகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+