சென்னையில் "மொபைல் பந்த்"
சென்னை:
மொபைல் போன் மூலம் மெஸேஜிங்குக்காக பணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்ததால் மொபைல் போன்உபயோகிக்கும் சென்னைவாசிகள் நூதனமான முறையில் வெள்ளிக்கிழமை முதல் "மொபைல் பந்த்" நடத்திவருகின்றனர். சனிக்கிழமையும் இந்தப் போராட்டம் தொடரும்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மெஸேஜிங்குக்காகப் பணம் வசூலிப்பதில்லை. ஆனால்மெஸேஜிங்குக்காகப் பணம் வசூலிக்கப் போவதாக, திடீரென்று மொபைல் போன் சேவை வழங்கும்நிறுவனத்தார்அறிவித்தவுடன், வெகுண்டெழுந்துவிட்டனர் சென்னை நகரில் மொபைல் போன் உபயோகிக்கும்மக்கள்.
மொபைல் வைத்திருப்பவர்கள் அதை ஆன் செய்யாமல் வைத்திருப்பார்கள். இதுதான் நூதனமுறையில் இவர்கள்நடத்தும் "மொபைல் பந்த்".
ஜூலை 5ம் தேதி முதல் மொபைல் போன் மூலம் மெஸேஜ் அனுப்பினால் அதற்குப் பணம் வசூலிக்கப்படும் என்றுசமீபத்தில் அறிவித்தனர் மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனத்தினர்.
இதையடுத்து மொபைல் வைத்திருக்கும் சென்னைவாசிகளின் மொபைல் போன் மூலம் ஒரு தகவல் மின்னலாகப்பறந்தது.
""ஜூலை 4 முதல் ஜூலை 7 ம் தேதி வரை யாரும் மொபைல் போனை உபயோகிக்க வேண்டாம். மொபைல்போனை ஆன் செய்யாமல் வைத்திருங்கள். உங்களுக்குத் தெரிந்த 10 பேருக்காவது இந்த செய்தியைஅனுப்புங்கள். ஏனெனில் மெஸேஜிங்குக்காக பணம் வசூலிப்பதைக் கண்டித்து இந்த "மொபைல் பந்த்"நடத்தப்படுகிறது"" என்ற தகவல் மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்குப் பறந்தது.
அந்தத் தகவலில், "மொபைல் போன் வைத்திருப்பவர்களில் 70 சதவீதம் பேர் மொபைல் போனை ஆன் செய்யாமல்வைத்திருந்தால்தான், மெஸேஜிங்குக்காக பணம் வசூலிக்கும் திட்டத்தை மொபைல் போன் சேவை வழங்கும்நிறுவனத்தார் கைவிடுவார்கள்" என்றும் கூறப்பட்டிருந்தது.
மொபைல் போன் நிறுவனங்கள் ஒரு மெஸேஜூக்கு ரூ.1.50 தான் கட்டணமாக வசூலிப்பதாக அறிவித்துள்ளார்கள்.சென்னையில் மொபைல் போன் உபயோகிப்பவர்கள் அதிகம்.
கூரியர் பையன் முதல் மேனேஜர் வரை, கிளார்க் முதல் உயர்நிலைப்பள்ளி மாணவன் வரை அனைவருமேமொபைல் போன் மூலம் மெஸேஜ் கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் மெஸேஜிங்குக்காகப் பணம்வசூலிப்பதாக அறிவித்தவுடன், இவர்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
மெஸேஜ் அனுப்புவதற்குப் பணம் வசூலிப்பதால் அதிக அளவு பாதிக்கப்படுபவர்கள் வருமானமே இல்லாதஉயர்நிலைப்பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்கள்தான்.
மொபைல் போன் விற்பனை செய்யும் ஏஜன்ட் சுஷீல் கூறுகையில், தற்போது பேஜரை விட மொபைல் போன்கள்அதிக அளவு உபயோகத்தில் உள்ளன. எல்லோராலும் மெஸேஜ் அனுப்புவதற்கு முழுத் தொகையையும் கொடுக்கமுடியாது. அதனால்தான் மொபைல் போன் மெஸேஜிங் இலவசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்என்றார்.
இருப்பினும் கேர்ள் பிரண்டுக்கு மெஸேஜ் அனுப்பும் போதும், கேர்ள் பிரண்டிடமிருந்து வரும் தகவல்களைரசித்துப் படிக்கும்போதும் கிடைக்கும் சுகமே அலாதியானது என்றும் சிலர் கருதுகின்றனர். இதுபோன்றமெஸேஜ்களுக்காகப் பணம் கொடுப்பதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள் போலத்தான் தோன்றுகிறது.
அந்த சமயத்தில் இது டிஜிட்டல் வாழ்த்து அட்டைபோல் விஷயங்களை சம்பந்தப்பட்டவருக்கு உடனுக்குடன்சேர்க்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications