புலிகளைக் கட்டுப்படுத்த சந்திரிகா புதிய வியூகம்
கொழும்பு:
இலங்கையில் அவசரகால உத்தரவு காலாவதியாகிவிட்ட நிலையில், மீண்டும் அதை நீட்டித்தால் எதிர்க்கட்சிகளின்விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், புலிகளின் செயல்பாடுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில்,புதிய சட்டத்தைக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளார் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.
இலங்கையில் 25 மாவட்டங்கள் பதட்டம் நிறைந்த பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் அங்குசட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸாருக்கும், ராணுவத்துக்கும் அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இவர்கள் சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள்வைத்திருப்பார்கள் என்று இலங்கை அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
இலங்கையில் அவசரகால உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது ஆளும்கட்சியானசந்திரிகாவின் மக்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், தனது ஆதரவை வாபஸ்பெற்றுக் கொண்டது.
இதையடுத்து, மீண்டும் அவசரகால உத்தரவை நீட்டித்தால் எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடும்என்று அதிபர் சந்திரிகா கருதினார். இதற்காக, புதிய சட்டத்தின் மூலம் புலிகளின் செயல்பாடுகளைக் கட்டுக்குள்கொண்டு வருவது என்றும் அவர் தீர்மானித்தார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகளை ஒடுக்கும் வகையில் 1983ம் ஆண்டு அவசரகால உத்தரவுபிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், இலங்கை அரசு தங்கள் அரசியல் எதிர்க்கட்சிகளைக் கட்டுக்குள்வைத்திருக்கவும் அவசரகால உத்தரவைப் பயன்படுத்தி வந்தது.
தேர்தலை ஒத்திவைத்தல், வர்த்தக சங்கங்களை தடை செய்தல் மற்றும் பத்திரிக்கைகளுக்கு தடை விதிக்கவும் இந்தஅவசரகால உத்தரவு உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டம்:
இதற்கிடையே பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், புலிகளின் செயல்பாடுகளைக் கட்டுக்குள்கொண்டு வரும் வகையிலும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, போலீஸாருக்கும், ராணுவ வீரர்களுக்கும் சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்கும் வகையில் அதிக அதிகாரம்கொடுக்கப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications