மேம்பால ஊழல் வழக்கு : நீதிபதிக்கு கொலை மிரட்டல்- பாதுகாப்பு கேட்கிறார் மகன்
சென்னை:
கருணாநிதி, ஸ்டாலின் மீதான மேம்பால ஊழல் வழக்கை விசாரித்து வரும் சென்னைை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதிஅசோக் குமாருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வருவதாக அவரது மகன் எட்வின் பிரபாகர்தெரிவித்துள்ளார்.
எனது தந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரை சிலமர்ம நபர்கள் தொடர்ந்து வருகின்றனர். அவருக்க கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன எனவும் அவர்கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆளுனர் ரங்கராஜனுக்கும் பிரபாகர் கோரிக்கை அனுப்பியுள்ளார். ஆளுனர் தலையிட்டு எனதுதந்தைக்கு கூடுதல் பாதுகாப்பு தர ஏற்பாடு செய்ய வேண்டும் என எட்வின் கோரியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதியைக் கைது செய்த போலீசார் அவரை நீதிபதி அசோக் குமாரின்வீட்டில் தான் ஆஜர்படுத்தினர். அவர் தான் கருணாநிதியை சென்னை மத்திய சிறையில் 10ம் தேதி வரை காவலில்வைக்க உத்தரவிட்டார்.
அதே போல ஸ்டாலினும் இவரிடம் தான் ஆஜரானார். அவரை 14ம் தேதி வரை சிறையில் வைக்கவும் இதே நீதிபதிதான் உத்தரவிட்டார்.
போலீசாருக்கு டோஸ்:
பின்னர் கருணாநிதி, ஸ்டாலின் தொடர்பான இந்த மேம்பால வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதாஅரசுக்கும் போலீசாருக்கும் கடும் டோஸ் விட்டார் நீதிபதி அசோக் குமார்.
கருணாநிதியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நான் உத்தரவிட்டேன். ஆனால், அவரை மத்திய சிறைக்குக்கொண்டு சென்று பிச்சைககாரர் போல ரோட்டில் உட்கார வைத்திருந்தீர்கள். அவருக்கு ஒரு நாற்காலி கொடுக்கக்கூட உங்களுக்கு (போலீசுக்கு) மனம் வரவில்லை. உங்கள் இதயம் களிமண்ணால் செய்யப்பட்டதா என அசோக்குமார் கேட்க போலீசார் தலைகுனிந்து நின்றனர்.
அரசுக்குக் கண்டனம்:
அதே போல கருணாநிதி, ஸ்டாலின் மீதான இந்த வழக்கே கூட ஜோடிக்கப்பட்டது தான் எனவும் நீதிபதி அசோக்குமார் வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார். வெள்ளிக்கிழமை ஸ்டாலின், முன்னாள் தலைமைச்செயலாளர் நம்பியார், முன்னாள் அமைச்சர்கள் கோ.சி. மணி, பொன்முடி உள்பட 7 பேருக்கு ஜாமீன் வழங்கியநீதிபதி அசோக் குமார் கேட்ட பல கேள்விகளுக்கு அரசுத்தரப்பு வக்கீல் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் நீங்கள் சொல்லும் இந்த ஊழலில் எவ்வளவு லாபம் கிடைத்தது?இவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் என்ன பாதிப்பு ஏற்படும்? என்பது போன்ற பல கேள்விகளை நீதிபதிஅசோக் குமார் கேட்க அரசு வக்கீல் பதில் சொல்லாமல் நின்றிருந்தார்.
ஸ்டாலின் என்னிடம் சரணடைந்தபோதே அவரை நான் விடுதலை செய்திருக்க முடியும் ஆனால், அதற்கும் 1000உள்நோக்கம் கற்பிக்கப்படும் என்பதால் தான் அவரை சிறையில் வைத்தேன். நான் மனசாட்சிப்படியும்சட்டப்படியும் நடந்து கொண்டேன்.
இந்த வழக்கில் புகாரில் ரூ. 8 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று கூறியுள்ள அரசு, எப்.ஐ.ஆரில் ரூ. 3 கோடிஊழல் நடந்திருப்பதாகக் கூறியிருக்கிறது. ஏன் இந்த முரண்பாடு?
வெறும் புகார் அடிப்படையில் தான் கருணாநிதி உள்பட இத்தனை பேரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.குற்றச் சதி செய்தார்கள் என்கிறீர்கள். இவர்கள் எப்போது அந்த சதித் திட்டத்தை தீட்டினார்கள்? உங்களிடம்ஆதாரம் இருக்கிறதா என அசோக் குமார் அரசு வக்கீலுக்கு கிடுக்கிப்பிடி போட்டார்.
கொலை மிரட்டல்:
அரசுத் தரப்புக்கு நீதிபதி இவ்வாறு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தான் அவருக்கு தொலைபேசியில்கொலை மிரட்டல் வர ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications