தினமும் ரூ 500 அபராதம்: ஜெ.வுக்கு எதிரான மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதா முதல்வர் பதவி வகிக்க தகுதிஇல்லாதவர். எனவே அவர் முதல்வர் பதவி வகிக்கும் ஒவ்வொரு நாளும் அவருக்கு 500ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவைஉயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டான்சி நில பேர ஊழல் வழக்கு, பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு முறைகேடாக அனுமதிவழங்கிய வழக்கு ஆகியவற்றில ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியவில்லை,

இந்நிலையில் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதால் ஜெயலலிதா முதல்வரானார்.

தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி இழந்த ஜெயலலிதா முதல்வராக பதவி வகிக்கதகுதி இல்லாதவர் அவர் முதல்வராக பதவி வகிக்கும் ஒவ்வொரு நாளும் அவருக்கு ரூ500 அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மோகன்ராஜ்என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற முதல் டிவிஷன் பெஞ்ச், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது பற்றி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என கூறி இந்த மனுவைதள்ளுபடி செய்தது.

இதே போல் சி.பி.ஐ. தொடர்ந்துள்ள ராபின் மெயின் வழக்கை எதிர்கொணடு வரும்காளிமுத்து எதன் அடிப்படையில் சபாநாயகராக நீடிக்கப்படுகிறார் என்பது குறித்துவிளக்கம் அளிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவையும்உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+