நீதிபதிக்கு மத்திய அரசு பாதுகாப்பு கோருகிறது திமுக

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கருணாநிதி, ஸ்டாலின் மீதான மேம்பால ஊழல் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கும் அவரதுகுடும்பத்தினருக்கும் மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக திமுக எம்.பியான சி.பி. திருநாவுக்கரவு சனிக்கிழமை டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,

இது குறித்து நீதிபதி அசோக்குமாரின் மகன் எட்வின் பிரபாகர் எனக்கு தகவல் அனுப்பியுள்ளார். அதில் தனதுதந்தைக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் தொலைபேசியிலும் மிரட்டல்கள் வருவதாகவம் கூறியுள்ளார்.

நீதிபதி எங்கு சென்றாலும் சில மர்ம நபர்கள் தொடர்ந்து வருவதாகவும் அவரது மகன் கூறியுள்ளார்.

நீதிபதி அசோக் குமார் நேர்மையாக நடந்து கொள்வதால் அவரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.எனவே, அவருக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் ஜனாதிபதியிடத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளேன்.

மத்திய அமைச்சர் மாறனும் கூட இது தொடர்பாக பிரதமரையும் உள்துறை அமைச்சர் அத்வானியையும் சந்தித்துப்பேசியுள்ளார்.

இவ்வாறு திருநாவுக்கரசு கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+