பா.ஜ.க. கூட்டணிக்குள் மீண்டும் நுழைவது எப்படி? ராமதாஸ் ஆலோசனை
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெள்ளிக்கிழமை விலகிய ராமதாஸ் மீண்டும் பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையத் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்க கட்சியின் செயற்குழுக் கூட்டத்தைவிரைவில் கூட்ட இருக்கிறார் ராமதாஸ்.
முன்னர் பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துவந்தது. அந்த கட்சியின் எம்.பிக்களான சண்முகம், பொன்னுசாமி இருவரும் மத்தியஅமைச்சர்களாக இருந்து வந்தனர்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கும், ராமதாசுக்கும்இடையே சண்டை ஏற்பட்டது. வாழப்பாடியும் தேசிய ஜனநாயக கூட்டணியில்இருந்தார். அவரை அந்த கூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என ராமதாஸ்வலியுறுத்தி வந்தார். ஆனால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமைவகிக்கும் தி.மு.க. அதற்கு மறுப்பு தெரிவித்தது.
மத்தியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியும் ராமதாசின் கோரிக்கை குறித்துகவலை கொள்ளவில்லை. இதனால் கோபம் கொண்ட ராமதாஸ் கடந்த பிப்ரவரி 5ம்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார்.
அவரது கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர்களாக இருந்த சண்முகமும்,பொன்னுசாமியும் தங்கள் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
அதன் பின் இரண்டே நாட்களில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைசந்தித்து, அன்பு சகோதரி ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் இணைகிறேன்என அறிவித்தார் சகோதரர் ராமதாஸ்.
இதையடுத்து நடந்த சட்டசபைத் தேர்தலில் 27 தொகுதிகளை பா.ம.கவுக்கு ஒதுக்கினார்ஜெயலலிதா. பாண்டிச்சேரியில் ஆட்சியைக் கூட பா.ம.கவுக்கு ஒதுக்க முன் வந்தார்ஜெயலலிதா.
தமிழக தேர்தலில் 27 இடங்களில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 20தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், பாண்டிச்சேரியில் மண்ணைக் கவ்வியது.இதனால், அங்கு ஆட்சி அமைப்பது என்ற பா.ம.கவின் கனவில் மண் விழுந்தது.
பாண்டிச்சேரியில் ஆட்சி கிடைக்காத நிலையில் மத்தியிலும் 2 அமைச்சர்களைஇழந்தால் வெறுத்துப் போனது பா.ம.க. 20 எம்.எல்.ஏக்களை வைத்திருந்தாலும் கூடபயனில்லை எனக் கருதிய ராமதாஸ் தனது மகன் அன்பு மணியை ராஜ்யசபாஎம்.பியாக்க முயன்றார்.
இதற்காக அதிமுகவின் ஆதரவைக் கோரினார். ஆனால், ராமதாசின் கோரிக்கையைஏற்க ஜெயலலிதா மறுத்துவிட்டார். அன்பு மணியை எம்.பியாக்க உதவினால் பின்னர்அவரை மத்திய அமைச்சராக்கிப் பார்க்க ராமதாஸ் ஆசைப்படுவார். அப்போதுநம்மை உதறிவிட்டு பா.ஜ.கவுக்குத் தாவுவார் என்பதை உணர்ந்த ஜெயலலிதா அவரதுதிட்டத்துக்கு முட்டுக் கட்டை போட்டுவிட்டார்.
ஆனால், அ.தி.மு.க.கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து ராமதாஸ்கூறுகையில், எங்களை ஜெயலலிதா மரியாதையாக நடத்தவில்லை. மேலும் தங்கள்கட்சிக்கு 1 ராஜ்ய சபா எம்.பி. பதவி ஒதுக்கப்பட வேண்டும் என கேட்டிருந்தோம்.அதற்கும் ஜெயலலிதா எந்த விதமான சாதகமான பதிலும் தரவில்லை. தன்மானத்தைஇழந்துவிட்டு அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை . எனவே அந்தகூட்டணியிலிருந்து விலகுகிறோம்.
மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது பற்றி விவாதிக்க விரைவில் கட்சிகூட்டம் கூட்டப்படும். அப்போது இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
ஆனால், ராமதாசை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ப்பது குறித்து பா.ஜ.கவோ அல்லது திமுகவோவாய் திறக்காமல் அமைதி காத்து வருகின்றன.
இதனால், எப்படி மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்குள் நுழைவது, அதற்காக என்ன விதமான அரசியல் உத்திகளைக்கையாளலாம் என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications