சென்னையில் கடலில் மூழ்கி 3 பேர் பலி
சென்னை:
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் குளிக்கச் சென்ற அண்ணன்-தம்பி உள்ளிட்ட 3 பேர் கடலில் மூழ்கிஇறந்தனர்.
சென்னை அடையாறில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவரது மகன்கள் சசிகுமார் (வயது 19), சாந்தகுமார்(வயது 18). இவர்கள் ப்ளஸ் 2 படித்து வந்தனர். இவர்கள் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் சேகர். இவரது மகன்தினேஷ் (வயது 14).
விடுமுறை தினங்களில் நண்பர்கள் அனைவரும் கடலில் சென்று குளிப்பது வழக்கம். பல நண்பர்களுடன் சசிகுமார்,சாந்தகுமார், தினேஷ் ஆகியோரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெரும் அலை ஒன்று வந்து,இந்த 3 பேரையும் இழுத்துச் சென்றுவிட்டது.
இவர்களைத் தவிர மற்ற நண்பர்கள் பத்திரமாகக் கரை ஏறிவிட்டனர். வெகு நேரமான பின்பும் அலையால்இழுத்துச் செல்லப்பட்ட மூவரும் கரை சேராததால், இவர்களது நண்பர்கள் போலீசுக்குத் தகவல் தந்தனர்.
கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட 3 பேரும் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகிறது.மீனவர்களின் உதவியுடன் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியை போலீசார்மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை துறைமுகம் பகுதியில் ஒரு சிறுவனின் உடல் கரை ஒதுங்கி இருப்பது தெரியவந்தது. அந்தசிறுவன் கடலில் சிக்கி இறந்தவர்களில் ஒருவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் சசிகுமார், சாந்தகுமார்,தினேஷ் ஆகியோரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் வந்து பார்த்த போது, அந்த சிறுவன் வேறொருவர் என தெரியவந்தது. அந்த சிறுவன் யார் என்பதுதெரியவில்லை.
கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் இறந்துபோயிருக்கலாம் என எண்ணம் நிலவி வரும் நிலையில், அவர்கள் உடலும் கிடைக்கவில்லை.
துறைமுகம் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய சிறுவன் யார் என்பது குறித்தும் போலீசார் வீசாரணை செய்துவருகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications