தே.ஜ. கூட்டணியில் பா.ம.க. இணைய பா.ஜ.க. எதிர்ப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க.தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. தேர்தலிலும் அந்த கூட்டணி நீடித்தது.
இந்நிலையில் அ.தி.மு.க. தன்னை அவமதித்ததாகக் கூறி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக பா.ம.க.தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார். தேசியஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து பா.ம.கவின் செயற்குழுகூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பா.ம.க. மீண்டும் தே.ஜ. கூட்டணியில் இணைவதற்கு தமிழக பா.ஜ.க. கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல. கணேசன் செய்தியாள்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ராமதாஸ் விலகியது பற்றி பாராட்டுவதற்கோ விமர்சிப்பதகோ எதுவும் இல்லை.
ராமதாசைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவர் எடுத்த முடிவு, எதிர்பார்த்த முடிவாகத்தான் இருக்கும்.
அ.தி.மு.க. தன்னை அவமதித்துவிட்டதால், தான் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
அ.தி.மு.கவைப் பற்றி முன் பின் அறியாத ஒருவர் இவ்வாறு கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால்அ.தி.மு.கவின் குணம் அறிந்தவர்தானே ராமதாஸ்.
தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டிருப்பதாகவோ அல்லது வன்னிய சமுதாயத்தினருக்கு பாதிப்பு ஏற்பட்டுஇருப்பதாகவோ அல்லது கருணாநிதியை கைது செய்த விதம் சரியில்லை என்றோ, இதில் ஏதாவது ஒரு காரணத்தைசொல்லி அ.தி.மு.கவில் இருந்து விலகி இருந்தால் பாராட்டி இருப்போம்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலிகி உள்ள ராமதாஸ், மீண்டும் தே.ஜ. கூட்டணியில் இணைய போவதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தே.ஜ. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்தால், அது தே.ஜ. கூட்டணிக்கு பெருமை சேர்க்காது; அவருக்கும்பெருமை சேர்க்காது என்று கூறினார் இல. கணேசன்.
ரயில் பெட்டி அல்ல தே.ஜ. என்கிறார் ஜனா.கிருஷ்ணமூர்த்தி:
பா.ம.க. மீண்டும் தே.ஜ. கூட்டணியில் இணைவதை பா.ஜ.க. தலைவர் ஜனா. கிருஷ்ண மூர்த்தியும் எதிர்த்துள்ளார்.
இது குறித்து அவர் சிம்லாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
எங்களுடன் சேர விரும்பும் அனைத்து கட்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம், கூட்டணியில்இருந்து விலகிச் சென்ற ஒரு கட்சி, பின்பு மீண்டும் அதே கூட்டணியில் சேர வேண்டுமானால் அதற்கு கூட்டணியின்அனுமதி தேவை.
ஏனென்றால் இந்த கட்சிகள் இஷ்டப்படி விலகுவதற்கும், இணைவதற்கும் இது ஒன்றும் ரயில் பெட்டி இல்லை.
திரிணாமுல் காங்கிரசும், பா.ம.கவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முன் வந்துள்ளதாக செய்திகள்தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் பிரதமர் வாஜ்பாயும், கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து ஆலோசித்துமுடிவு எடுப்பார்கள் என்றார்.
-
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications