தேவாரம் நியமனத்துக்கு எதிரான 3 வழக்குகள் தள்ளுபடி
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கான தமிழக அதிரடிப்படை தலைவராக தேவாரம் நியமிக்கப்பட்டதைஎதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன.
வீரப்பனைப் பிடித்தே தீருவது என்ற நோக்கத்துடன், தமிழக அதிரடிப்படையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்ததமிழக முதல்வர் ஜெயலலிதா, அதிரடிப்படையின் தலைவரையும் மாற்றினார்.
முன்னாள் டி.ஜி.பியான தேவாரத்தை அதிரடிப்படைத் தலைவராக ஜெயலலிதா நியமனம் செய்தார். தமிழகஅதிரடிப்படைக்கு மட்டுமல்லாமல், தமிழக-கர்நாடக கூட்டு அதிரடிப்படை தலைவராகவும் தேவாரம் ஏகமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேவாரம் நியமனத்தை எதிர்த்து, பல பேர் பல திசைகளிலிருந்தும் கூக்குரல் எழுப்பினார்கள். தேவாரத்தின் மீது பலமனித உரிமைப் புகார்கள் எழுந்துள்ளதால், அவரை அதிரடிப்படைக்குத் தலைவராக நியமிக்கக் கூடாது என்றுபலரும் புகார் கொடுத்தனர். ஆனால் ஜெயலலிதா எதையும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், தேவாரம் நியமனத்தை எதிர்த்து, மனித உரிமைகள் கழகம் உள்பட 3 பொது நல அமைப்புகள்,சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமைசென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.
பின்னர் இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.கே. ஜெயின் மற்றும் நீதிபதி தங்கவேல்ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனேயே தமிழக அதிரடிப்படைத் தலைவராக தேவாரம்நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் அவருடைய நியமனம் நியாயமானதே.
எனவே, அதிரடிப்படைத் தலைவர் தேவாரத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த 3 மனுக்களும் தள்ளுபடிசெய்யப்படுகின்றன என்று 2 நீதிபதிகளும் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications