அ.தி.மு.க. அவை தலைவராகிறார் புலமைப்பித்தன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அ.தி.மு.கவின் அவைத்தலைவராக புலவர் புலமைப்பித்தனும், துணை பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர்முத்துசாமியும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அ.தி.மு.கவின் அவைத்தலைவராக இருந்த நெடுஞ்செழியன் மறைந்த பின்னர், காளிமுத்து அவைத்தலைவராகநியமிக்கப்பட்டார்.
சட்டசபை தேர்தலுக்கு பிறகு அவர் சபாநாயகராக பொறுப்பேற்றதால், அவைத் தலைவர் பதவியை அவர்ராஜினாமா செய்தார். இதனால் தற்போது அந்தப் பதவி காலியாக உள்ளது.
இம்மாதம் 14ம் தேதி அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், புலவர் புலமைப்பித்தன் அ.தி.மு.கவின் அவைத் தலைவராகவும், முன்னாள் அமைச்சர் முத்துசாமிதுணை பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட உள்ளனர் என அ.தி.மு.க.வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications