என்சிசி மாணவர்கள் கல்விக்கு ரூ.5,000 உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவர்களுடைய கல்விக்காக ரூ.5,000 உதவித் தொகை வழங்கப்படும் என்றுமத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

பள்ளியில் படிக்கும் என்சிசி மாணவர்களான ஜூனியர் டிவிசன் மாணவர்கள், 10ம் வகுப்பில் 65 சதவீதமதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரியில் படிக்கும் சீனியர் டிவிசன் மாணவர்கள், கலைப் பிரிவினராக இருந்தால் 55 சதவீத மதிப்பெண்களும்,அறிவியல் பிரிவினராக இருந்தால் 65 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும்பி.சி. வகுப்பினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்கப்படும்.

இத்துடன் அவர்கள் என்சிசியில் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 80சதவீத வருகைப் பதிவையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட என்சிசி அலுவலகத்திலும், என்சிசி குரூப்தலைமை அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னையில் உள்ள என்சிசி தலைமை அலுவலகத்துக்கு, ஆகஸ்டு மாதம்30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

என்சிசி நலச் சங்கம் மூலம் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+