கருணாநிதியிடம் போலீஸ் நடந்து கொண்டது சரி தான்: ஜெ.
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, போலீஸார் அத்துமீறி செயல்படவில்லை என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 30ம் தேதி அதிகாலை கருணாநிதியும் மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலுஆகியோரும் போலீஸாரால் பயங்கரமாகத் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் நடந்து சரியாக 10 நாட்களுக்குப் பின்னர், 10 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம்,இச்சம்பவம் தொடர்பான தன்னுடைய மவுனத்தை உடைத்துள்ளார் ஜெயலலிதா.
இவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
கருணாநிதியின் கைது சம்பவம் பற்றி முன்னுக்குப் பின் முரண்பாடான தகவல்கள் வெளியாகி வருவதால், தற்போதுஇந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு போலீஸ் சட்டம், 1861-ன் படியே கருணாநிதி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சட்டத்தின் படி, ஒருவரைப்போலீஸார் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சென்று கைது செய்யலாம். மேலும், வாரண்ட் இல்லாமல் கைதுசெய்யவும் போலீஸாருக்கு இச்சட்டம் அனுமதி கொடுக்கிறது. இதில் எந்தவிதமான போலீஸ் அத்துமீறலும் இல்லை.
ஒரு முதுபெரும் அரசியல்வாதி கைது செய்யப்படுவதால், அதற்கு இரவு நேரமே உகந்ததாகக் கருதப்பட்டது. பகல்நேரத்தில் கைது செய்தால் மாநிலத்தில் ஏற்படும் கலவரங்களைத் தவிர்ப்பதற்காகவே, கருணாநிதியைக் கைதுசெய்வதற்காக நள்ளிரவில் போலீஸார் சென்றனர்.
ஜூன் 29ம் தேதி நள்ளிரவுக்கு மேல் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற போலீஸார், அவர் படுக்கையறைக் கதவை10 நிமிடங்களாகத் தட்டிக் கொண்டிருந்தனர். அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லாமல் போகவே, அவர்கள்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றிருக்கிறார்கள். இதிலும் எந்தவிதமான அத்துமீறலையும் போலீஸார்கையாளவில்லை.
கருணாநிதியைக் கைது செய்யச் சென்ற போலீஸாரை, மத்திய அமைச்சர்கள் 2 பேரும் கடமையைச் செய்யவிடாமல் தடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், மாறன் போலீஸாரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். பாலுவோ,சிபிசிஐடி அலுவலகத்தில் போலீஸாரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
தன்னைக் கைது செய்ய வரும்போது, போலீஸார் அராஜகம் செய்தனர் என்று கூறும் கருணாநிதி, தற்போதுஅதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் விசாரணைக் கமிஷனையும் விமர்சித்து வருகிறார். இதிலிருந்தே,கருணாநிதி நன்றாக இரட்டை வேடம் போடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த தனி நபர் விசாரணைக் கமிஷன் மூலம், கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் பற்றி விசாரிக்கும்போது,திமுகவின் உண்மையற்ற தகவல்கள் வெளியாகிவிடும் என்ற பயத்தால்தான் திமுகவினர் விசாரணைக் கமிஷனைஎதிர்கொள்ளப் பயப்படுகிறார்கள்.
எந்த விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறிய கருணாநிதி, இந்த விசாரணைக் கமிஷனைஎதிர்கொள்ளத் தயங்குவது ஏன் என்று தன்னுடைய அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications