திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பியாகிறார் சரத்குமார்
சென்னை:
திமுகவின் சார்பில் சரத்குமர் ராஜ்யசப எம்.பியாகிறார். இத் தகவலை திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
தமிழகத்தின் சார்பில் ராஜ்யசபா எம்.பிக்களாக உள்ள 6 பேரின் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து வரும் 23ம்தேதி தேர்தல் நடக்கிறது.
சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்கள் வாக்களித்துத் தான் எம்.பிக்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.
இப்போது சட்டசபையில் உள்ள கட்சிகளின் பலத்தை வைத்துப் பார்த்தால் அதிமுக 4 பேரை எம்.பியாக்க முடியும்.அக் கட்சியின் சார்பில் நடிகர் எஸ்.எஸ். சந்திரன் உள்பட 4 பேரை எம்.பி. தேர்தலில் நிறுத்துவதாக முதல்வரும் அக்கட்சியின் தலைவியுமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந் நிலையில் திமுக சார்பில் நடிகர் சரத்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். முதலில் அதிமுகவில் இருந்த சரத் குமார்அரசியல்வாதிகளுக்கே உரிய சட்டத்தின்படி கட்சி தாவினார். திமுகவுக்கு வந்த அவருக்கு 1998ம் ஆண்டுமக்களவைத் தேர்தலில் நிற்க திமுக வாய்ப்பளித்தது.
திருநெல்வேலியில் போட்டியிட்ட அவர் பெரும் தோல்வியடைந்தார். ஆனாலும் தொடர்ந்து அந்தக் கட்சியிலேயேஇருந்தார். 2 தேர்தல்களிலும் திமுகவுக்காக அயராது பிரச்சாரம் செய்தார்.
கணவரை விட்டுப் பிரிந்திருந்த திமுகவின் பிரச்சார பீரங்கியான நடிகை ராதிகாவை மனைவியை விட்டுப்பிரிந்திருந்த சரத் குமார் கைப்பிடித்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் மனைவி சகிதம் பிரச்சாரம் செய்தார். சன்டிவியின் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நடத்தவும் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால், மெல்ல தனது கடன்பிரச்சனைகளில் இருந்து மீண்டார்.
இப்போது திமுகவுக்கு சட்டசபையில் 28 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு 9 எம்.எல்.ஏக்கள்உள்ளனர். அவர்களின் ஆதரவுடன் சரத்குமார் எம்.பியாவதில் பிரச்சனை இருக்காது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications