விமானத் தயாரிப்பில் புதிய சாப்ட்வேர் "ஆட்டோலே"
பெங்களூர்:
ஏர்பஸ் நிறுவனத்தின் புதிய ஜம்போ ஏ380 விமானத் தயாரிப்பில் "ஆட்டோலே" என்ற புதிய சாப்ட்வேர்பயன்படுத்தப்படுகிறது.
விமானத்தின் பாடிதான் (அதாவது உடல் அமைப்புதான்) விமானத்தின் எடையைக் கூட்டவோ குறைக்கவோசெய்யும். அதனால், எடை குறைவான பொருளைப் பயன்படுத்தி இந்த உடல் அமைப்பை அமைத்தாலே,விமானத்தின் எடை குறைந்து விடும்.
இப்பொருள்களின் தயாரிப்பில்தான் "ஆட்டோலே" சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது. எந்தெந்த விகிதத்தில்பொருள்களைக் கலந்தால், விமானத்தின் உடலுக்குத் தேவையான லேசான பொருள் கிடைக்கும் என்பதைக் கூட்டிக்கழித்து, பெருக்கி வகுத்து, இந்த சாப்ட்வேர் கணித்துச் சொல்லிவிடும்.
அதற்குத் தக்கவாறு பொருள்களைக் கலந்தால், விமானத்தின் உடல் பாகத்திற்குத் தேவையான லேசான பொருள்கிடைத்துவிடும். பிறகென்ன? லேசான உடலமைப்பு கொண்ட விமானமும் தயாராகி விடும்.
இப்படி விமானத்தின் எடையைக் குறைத்து விட்டால், விமானம் வேகமாகப் பறக்கும்தானே? மேலும், எடைகுறைவதால் விமானத்தின் அளவையும், அதாவது நீளத்தையும், பெரிதாக்கலாம் அல்லவா?
இந்த விஷயத்தில் ஜம்போ போன்ற பெரிய விமானங்களைத் தயாரிப்பதற்கு இந்த "ஆட்டோலே" சாப்ட்வேர் எந்தஅளவுக்குத் துணைபுரியும் என்று இப்போது சொல்லாமலே தெரிந்துவிடும்.
அதனால்தான், ஏர்பஸ் நிறுவனத்தினர் தாங்கள் தயாரிக்கவிருக்கும் புதிய ஜம்போ ஏ380 ரக பிரம்மாண்டமானவிமானத்திற்கு "ஆட்டோலே"யைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள "அடா" என்ற விமான வளர்ச்சி ஏஜென்சிதான் இந்த "ஆட்டோலே" சாப்ட்வேரைஅறிமுகப்படுத்தியுள்ளது.
"ஆட்டோலே"யைப் பயன்படுத்தி விமானங்கள் தயாரிப்பதால், ஏகப்பட்ட நேரம் மிச்சமாகிறதாம்.பயன்படுத்தப்படும் பொருள்களின் தரமும் கூடுகிறதாம். இன்னும் சொல்லப் போனால், சாதாரணமாக ஒரு விமானம்தயாரிக்கப்படுவதற்கு ஆகும் காலத்தைவிட, 6 முதல் 8 மாதங்களுக்கு முன்னதாகவே வேலையை முடித்துவிடலாமாம்.
கிட்டத்தட்ட 70 சதவிகித நேரம் மிச்சமாகும் என்றும் கணக்கிட்டுள்ளனர். இதனால், சர்வதேச மார்க்கெட்டில்"ஆட்டோலே"க்கு ஏகப்பட்ட டிமாண்ட் என்று கூறப்படுகிறது.
விமானம் தயாரிப்பதில் மட்டுமில்லாமல், கப்பல் கட்டுமானத்திலும் விளையாட்டுப் பொருள்கள் தயாரிப்பிலும்கூட "ஆட்டோலே"யைப் பயன்படுத்த முடியும் என்று "அடா"வின் திட்ட இயக்குநர் கோட்டா ஹரிநாராயணாகூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications