நியாயமாக நடந்தால் பழிவாங்க மாட்டோம்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஜெ. அறிவுரை
சென்னை:
நேர்மையான, நியாயமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் இருக்காதுஎன முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதனால் திட்டங்களில் அவர்கள் கவனம் செலுத்த முடியாமல் உள்ளனர். கருணாநிதி ஆட்சியில் அவருக்கு மிகநெருக்கமாக இருந்த அதிகாரிகள் எந்தப் பணியும் ஒதுக்கப்படாமல் சும்மா உட்கார வைக்கப்பட்டனர். பின்னர்இவர்களுக்கு டம்மியான பதவிகள் வழங்கப்பட்டன.
பந்தாடப்பட்டு வருவதால் அதிகாரிகள் மட்டத்தில் அரசு மீது அதிருப்தி அதிகரித்து வருவதாக செய்திகள் வரும்நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல்வர் ஜெயலலிதா ஒரு அவசர அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படும். அரசு அதிகாரிகளுக்கு நம்பிக்கையைஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் தான் அதிகாரிகள் மீது பழிவாங்கல்கள்நடந்தன.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு துறையின் அதிகாரிகளையும் அழைத்து கூட்டங்கள் நடத்தி துறைகளின்செயல்பாட்டை ஆராய்ந்து வருகிறோம். பணித்தேவை இருக்கும்பட்சத்தில் தான் அதிகாரிகள் மாற்றம் இருக்கும்.
அதிகாரிகள் மத்தியில் எந்தவிதமான மன வருத்தமோ அல்லது கோபமோ இல்லை. ஆனால், சில குழப்பவாத தீயசக்திகள் தான் அதிகாரிகள் இடையே இடமாற்றம் காரணமாக மன வருத்தம் இருப்பதாக செய்திகளைப் பரப்பிவருகின்றன. அரசின் நிர்வாகத்தை குலைக்கவும் அரசின் நல்ல திட்டங்கள் மக்களுக்கு போய்ச் சேரவிடாமல்தடுக்கவும் தான் இது போன்ற புரளிகளை சில தீய சக்திகள் பரப்பி வருகின்றன.
இதற்கு அதிகாரிகள் செவி சாய்க்கக் கூடாது. உங்கள் பணியை நேர்மையாக செய்யுங்கள்.
கடந்த திமுக ஆட்சியின்போது அதிகாரிகளின் மன பலம் குறைந்துபோய் இருப்பதை தேர்தல் அறிக்கையிலேயேசுட்டிக் காட்டி இருந்தோம். அதை சரி செய்யவும் அதிகாரிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் நான்அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications