ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு தண்டனை ரத்து
சென்னை:
சொத்துக் குவிப்பு வழக்கில், ஐ.ஏ.எஸ். அதிகாரி இன்பசாகரனுக்கு தனி நீதிமன்றம் வழங்கிய ஓர் ஆண்டுகடுங்காவல் தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய புதன்கிழமை உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி இன்பசாகரனுக்கு ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனைவழங்கியது தனி நீதிமன்றம். அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக அவருக்கு இந்தத் தண்டனையை தனிநீதிமன்ற நீதிபதி எஸ். சம்பந்தம் அளித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, தண்டனை பெற்ற இன்பசாகரனை டிஸ்மிஸ் செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடந்த மேமாதம் உத்தரவிட்டது. இதனால் மே 31ம் தேதி ரிடையர் ஆக வேண்டிய இன்பசாகரன், மே 29ம் தேதி டிஸ்மிஸ்செய்யப்பட்டார்.
இதற்கிடையே, தனி நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்இன்பசாகரன். வழக்கை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா காதரி, புதன்கிழமை மாலை 5 மணிக்கு, தனிநீதிமன்றத்தின் தண்டனைத் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
தனி நீதிமன்றம் இதுவரை 19 தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஆனால், அப்பீலுக்குப் பிறகு, இந்த வழக்கில்தான் முதன்முதலாக ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை நீதிபதி கூறியவுடன், இன்பசாகரன் தன்னுடைய கன்னத்தில் கைகளால் போட்டுக்கொண்டு,நீதிபதியைக் கையெடுத்துக் கும்பிட்டார். பின்னர் நீதி மன்றத்திலிருந்து வெளியே வந்தவுடன், நீதிமன்றத்தைநோக்கி மேலும் ஒரு கும்பிடு போட்டு விட்டுத்தான் இன்பசாகரன் கிளம்பினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications