சனிக்கிழமை இந்தியா வருகிறார் முஷாரப்
டெல்லி:
சனிக்கிழமை இந்தியா வரவுள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு மிக பலத்த பாதுகாப்புஅளிக்கப்படவுள்ளது.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு பல பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால்தான் அதி தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரகசிய பாதுகாப்பு:
நேரடியாக மட்டுமல்லாமல் ரகசிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும்ஆயிரக்கணக்கான உளவுப் பிரிவினர் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.
ரகசிய உளவுப் படைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து பாதுகாப்பு தொடர்பாக விவாதித்துவருகின்றனர்.
கடந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையைத் தாக்கிய லக்ஷர்-ஈ-தொய்பா அமைப்பு முஷாரபை எச்சரித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப் போவதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
டெல்லி, ஆக்ரா, ஆஜ்மீர், ஜெய்பூர் ஆகிய நகரங்களைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படுவர். அடுத்த நிலையில் தேசிய பாதுகாப்புப் படையினரும் முஷாரபின் சொந்த பாதுகாப்புப்படையினரும் பாதுகாப்பை கவனிப்பர்.
சனிக்கிழமை (14.07.01) காலை டெல்லி இந்திரா காந்த சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள பாலம்டெக்னிகல் ஏரியா விமான நிலையத்துக்கு சிறப்பு விமானத்தில் வந்திறங்குகிறார் முஷாரப். பின்னர் ஆக்ராவுக்குசெல்வார். திங்கள்கிழமை (16.07.01) மாலை ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் புறப்பட்டுச்செல்வார்.
டெல்லி தவிர, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
மெட்டல் டிடெக்டர்கள், பாம் ஸ்குவாட்கள், தீயணைப்புப் படையினர், மோப்ப நாய்கள், அதி நவீனஆயுதங்களுடன் கூடிய கவச வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
காலை 8.30 மணிக்கு விமான நிலையம் வரும் முஷாரப் உடனடியாக ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச்செல்லப்படுவார். அங்கு அவரை ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் வரவேற்பார். அவருக்கு சிவப்புக் கம்பளவரவேற்பு அளிக்கப்படும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications