போலீசாருக்கு ஜெயலலிதா அண்டார்டிகா ஐஸ்
சென்னை:
எதற்கெடுத்தாலும் போலீஸை குறை கூறக் கூடாது என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
வியாழக்கிழமை ஸ்டார் டிவிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:
நான் என்ன சொன்னாலும் அதற்கு உடனடியாக பதில் சொல்லி வரும் கருணாநிதி ஏன் விசாரணைக் கமிஷனைசந்திக்க பயப்பட வேண்டும். பத்திரிக்கையாளர்களிடம் பேசுவதை கமிஷனிடம் போய் நீதிபதியிடமும்சொல்லலாமே! ஏன் பயப்பட வேண்டும்?
போலீஸ் கருணாநிதி வீட்டுக்குச் சென்றபோது நடந்தது என்ன என்பது குறித்த உண்மைகளை வெளியே கொண்டுவர ஒரே வழி நீதிபதி ராமன் விசாரணைக் கமிஷன் தான். அதை ஏன் கருணாநிதி நிராகரிக்க வேண்டும்.
எதற்கெடுத்தாலும் போலீசைக் குறை கூறுவது வழக்கமாகிவிட்டது. பொது மக்கள், அரசியல்வாதிகள், குறிப்பாகபத்திரிக்கைகள் போலீசை குறை கூறுவதை வழக்கமாகவே ஆக்கிக் கொண்டு விட்டார்கள். எப்போதும் திட்டுவாங்குவது தான் போலீஸ்காரர்களின் வாழ்கையாகிவிட்டது.
கிரிமினல்களை கைது செய்வது அவர்களை சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் மட்டும் போலீசார்ஈடுபடுவதில்லை.
நம்முடைய அன்றாட வாழ்வில் அனைத்து வகையிலும் போலீசார் உதவி வருகின்றனர். சமூகத்தில் அமைதியைநிலைநாட்டி வருகிறார்கள். அவர்களின் துணை இல்லாமல் யாராவது அரசாங்கம் நடத்தி விட முடியுமா?அவர்களின் உதவியின்றி பொது மக்கள் அச்சமில்லாமல் வாழ்ந்துவிட முடியுமா?
வெள்ளம் வந்தாலும், மழை வந்தாலும், தீ பிடித்தாலும் எல்லா நேரத்திலும் அவசரத்துக்கு நாம் போலீசை தான்அழைக்கிறோம். அரசும் அவர்களை அனைத்துவிதமான பணிகளிலும் ஈடுபடுத்துகிறது. ஆனால், அவர்களுக்குபரிந்து பேச யாரும் இல்லை. எல்லோரும் போலீசை இப்படி திட்டிக் கொண்டிருந்தால் அவர்களின் மன பலம்என்ன ஆகும்?
மனபலம் இல்லாத போலீசை வைத்துக் கொண்டு சமூகத்தில் அமைதியை நிலை நிறுத்த முடியாது. அதனால் தான்நான் போலீசாரை விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறேன்.
நம்மை நாகரீகமான முறையில் வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் போலீசார் தான். அவர்களை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications