சரத்குமாருக்கு எம்.பி. பதவி: திமுகவில் கருத்து வேறுபாடு
சென்னை:
திமுகவின் ராஜ்யசபா எம்.பி. சீட், நடிகர் சரத்குமாருக்கு வழங்கப்பட்டதை திமுகவினர் சிலர் எதிர்த்துள்ளதாகத்தெரிகிறது.
பிரபல நடிகர் சரத்குமாருக்கு இந்த சீட் ஒதுக்கப்படுவதாக கடந்த திங்கள்கிழமை, திமுகவின் தலைவரும் முன்னாள்முதல்வருமான கருணாநிதி அறிவித்தார்.
ஆனால், சரத்குமாருக்கு இந்த சீட்டை ஒதுக்கியது, சில திமுகவினருக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. சிலர்வெளிப்படையாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ராஜ்யசபா தேர்தல் அதிகாரி சாரங்கியின் முன் சரத்குமார் தன்னுடைய வேட்பு மனுவைவியாழக்கிழமை காலை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலினும்வந்திருந்தார்.
திமுகவின் ராஜ்யசபா சீட்டை சரத்குமாருக்குக் கொடுத்ததை யாரும் எதிர்க்கக் கூடாது என்பதற்காகவே, ஸ்டாலினைசரத்குமாருடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்குக் கருணாநிதி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த சரத்குமார் கூறுகையில், "எனக்கு திமுக சீட் கொடுத்ததை யாரும்எதிர்க்கவில்லை. அனைவரும் முழுமையாக ஆதரவளித்துள்ளனர். தலைவர் கருணாநிதியின் ஆலோசனைப்படிசிறப்பாகச் செயல்படுவேன்" என்று நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications