மனித உரிமை கமிஷனிடம் ஸ்டாலின் புகார்
சென்னை:
தன் வீட்டில் புகுந்து அத்துமீறி நடந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகமிஷனிடம் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் மனு கொடுத்தார்.
மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினரான நீதிபதி சாமித்துரையிடம் ஸ்டாலின் அளித்துள்ள மனுவின் விவரம்:
இதனால், பெங்களூர் சென்று கொண்டிருந்த நான் உடனடியாக சென்னை திரும்பி, நீதிபதி முன் சரணடைந்த பின்,கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டேன்.
ஆனால், பெங்களூரில் இருந்து சென்னை வருவதற்குள், என்னுடைய வெளச்சேரி வீட்டிற்குள் போலீசார்புகுந்தனர். என்னுடைய மனைவி, மகள், மகன் ஆகியோர் நான் பெங்களூர் சென்றிருப்பதாகக் கூறியும், போலீசார்நம்பவில்லை.
வீட்டின் பல பகுதிகளிலும் என்னைத் தேடி, வீட்டில் உள்ள பொருட்களைத் தூக்கி எறிந்துள்ளனர். இதனால் என்குடும்பத்தில் உள்ளவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது என் மனதை மிகவும் வேதனைக்குள்ளாக்கிவிட்டது.
சென்னை நகர மேயராக மட்டுமல்ல, ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டசபை உறுப்பினராகவும் இருக்கும்என்னுடைய குடும்பத்தாரிடம் போலீசார் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்குரியது.
எனவே, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., ஐ.ஜி., சென்னை போலீஸ் கமிஷனர், சிபிசிஐடிபோலீஸார் ஆகியோருக்கு உரிய நோட்டீசை அனுப்பி, அத்துமீறி நடந்து கொண்ட போலீஸார் மீது சட்டபூர்வமாகஉரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி, மாநில மனித உரிமை கமிஷனைக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின்அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட நீதிபதி சாமித்துரை, நிருபர்களிடம் கூறியபோது:
மனுவைப் படித்துப் பார்த்த பின்னர், விசாரணையை விரைவில் தொடங்குவோம். விசாரணையை முடிப்பதற்கானகாலக்கெடு எதுவும் கிடையாது.
மனித உரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை நன்கு விசாரித்து, அவ்வாறு மீறப்பட்டிருந்தால் 3 நடவடிக்கைகளுக்குசிபாரிசு செய்வோம்.
1. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும்.
2. அரசு அல்லது தனியாரை விசாரிக்க உத்தரவிடப்படும்.
3. அரசு ஊழியர்களான போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
என்று கூறினார் சாமித்துரை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications