மூப்பனார் மகனை எம்.பியாக்க த.மா.கா. எம்.எல்.ஏக்கள் தீர்மானம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் மகனான கோவிந்தவாசனை ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் நிறுத்தவேண்டும் என அக் கட்சி எம்.எல்.ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அந்த ஒரு இடத்தில் போட்டி போடுவதற்கு தமிழ் மாநில காங்கிரசில் பெரிய குடுமிப் பிடி சண்டையே நடந்துவருகிறது.
இப்போதைய எம்.பியான ஜெயந்தி நடராஜனுக்கே அந்தப் பதவியை வழங்க மூப்பனார் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், எங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அந்தப் பதவி ஜெயந்திக்குக் கிடைக்கக் கூடாது என்பதில்பல போட்டியாளர்களும் தெளிவாக உள்ளனர்.
தங்களுக்கு பதவி கிடைக்கப் போவதில்லை என்பதை அறிந்து கொண்ட இந்தத் தலைவர்கள் மூப்பனார் மகன்கோவிந்தவாசனுக்கே அந்தப் பதவியை வழங்க வேண்டும் எனக் கூறி வந்தனர். ஆனால், இதை மூப்பனார்நிராகரித்து வந்தார்.
இந் நிலையில் கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் மூப்பனார் வியாழக்கிழமை தீவிர ஆலோசனை நடத்திவருகிறார்.
மூப்பனார் ஒரு பக்கம் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைராஜாஜி ஹாலில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். அதில் கோவிந்தவாசனையே எம்.பியாக்க வேண்டும் எனத்தீர்மானம் நிறைவேற்றிய எம்.எல்.ஏக்கள் அதை மூப்பனாருக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட நாளை தான் (வெள்ளிக்கிழமை) தான் கடைசி நாள். இதனால் போட்டியிடப்போகும் நபரை இன்று மாலையோ அல்லது நாளை காலையோ மூப்பனார் முடிவு செய்து அறிவிப்பார் எனமூப்பனாரின் இல்லத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications