ஜாமீனில் விடுதலையானார் கொளத்தூர் மணி

Subscribe to Oneindia Tamil

சேலம்:

வீரப்பனைப் பிடிக்க அரசுக்கு ஒத்துழைக்க மறுத்ததாகக் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி வியாழக்கிழமைஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அரசு கேட்டுக் கொண்டால் வீரப்பனைச் சந்திக்க காட்டிற்குச் செல்ல தயார் என சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

இதைத்தொடர்ந்து,வீரப்பனைப் பிடிக்க அரசுக்கு ஒத்துழைக்க மறுத்ததாக வழக்குத்தொடர்ந்து சேலம் கியு பிராஞ்ச்போலீசார் கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இவருடைய ஜாமீன் மனுவை விசாரித்த சேலம் 2-வது கோர்ட் நீதிபதி ரவீந்திரன், கொளத்தூர்மணியை, தினமும் சேலம் க்யூ பிராஞ்ச் போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும் என்றநிபந்தனையுடன் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

விடுதலையான கொளத்தூர் மணி நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:

என் மீது போடப்பட்ட வழக்கு அர்ப்பத்தனமானது. தமிழ்நாட்டில் பெரியார் திராவிடர் கழகம் வளர்ந்து வருகிறது.அதை தடுக்க சதி செய்கிறார்கள்.

தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் வீரப்பனின் நிபந்தனைகளை நிறைவேற்றாமல் உள்ளன. மக்கள் நலன் கருதி சிலநிபந்தனைகளை ஏற்றால் அரசுக்கு உதவத் தயாராக உள்ளேன்.

கியு பிராஞ்ச் போலீசார் என்னிடம் சாதரண விவரங்களைத்தான் கேட்டார்கள். அதேபோல் சிறையில்எல்லோரையும் போல்தான் என்னையும் நடத்தினார்கள் என்று கொளத்தூர் மணி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+