தே.ஜ.கூட்டணியில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ்
கோல்கத்தா:
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் அக்கூட்டணியில் வரும் ஜூலை21ம் தேதி இணைகிறது என அக்கட்சி தலைவர்கள் வெள்ளிக்கிழமை கூறினர்.
தெஹல்கா டாட் காம் ஆயுத பேர ஊழலில், பாரதிய ஜனதா கட்சி தலைவர் பங்காரு லட்சுமமணன், மற்றும் பலபாஜக தலைவர்கள் ஈடுபட்டிருந்ததாக வீடியோ ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, மம்தாபானர்ஜி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார்.
கடந்த மே மாதம் நடந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதுதிரிணாமுல். ஆனால், அங்கு அந்தக் கூட்டணி படுதோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இணையவுள்ளது என அக்கட்சியின்தலைவர்கள் கூறினர். ஆனாலும் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், மம்தாவுக்குக்கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திரிணாமுல் கட்சி கூட்டம் முடிந்த பின் திரிணமுல் காங்கிரசின் எம்.எல்.ஏ. பங்கஜ் பன்டாபாத்யாய்கூறுகையில், நாங்கள் மம்தா பானர்ஜிக்கு எங்கள் முழு ஆதரவையும் தெரிவித்து இருக்கிறோம். தேசிய ஜனநாயககூட்டணியில் இணைவது தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தையும் அவருக்கு அளித்து இருக்கிறோம் என்றார்.
திரிணாமுல் காங்கிரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கட்சியில் இருக்கும் அனைவரும் மீண்டும் தேசியஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என விரும்புகின்றனர். இக்கூட்டணியில் இணைவதா இல்லையாஎன்பது பற்றிய இறுதி முடிவை இந்த மாதம் 21ம் தேதி நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தின் போது மம்தாஅறிவிப்பார் என்றார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 23ம் தேதி கூடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு தோற்ற பின், இப்போது திரிணாமுல் காங்கிரசுக்குஇருக்கும் ஒரே வழி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதுதான். ஆனாலும், இதுபோல "பல்டி"அடித்துக் கொண்டடே இருப்பதற்காக அவர் கட்டாயம் மக்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மம்தா பானர்ஜி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதை மேற்கு வங்க பா.ஜ.கவினரும்விரும்பவில்லை. பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறுகையில், மீண்டும் மம்தாவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதாகஇருந்தால், அவர் நடந்து கொண்ட விதத்தை கவனத்தில் கொண்டு, அதன் பின் முடிவு எடுக்க வேண்டும் எனநாங்கள் மத்திய தலைமையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
மம்தா தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது என முடிவு எடுத்தாலும், தன்னை எதிர்த்த அஜீத் பாஞ்சா மீது,அவர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் முன் அஜீத் பாஞ்சவைகட்சியில் இருந்து நீக்கிவிடுவார் என்றும் தெரிகிறது.
பிரதமர் வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளார் மம்தா பானர்ஜி. இவர்கள் அனைவருமேதிரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதை வரவேற்றிருகிறார்கள் எனகூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை முஷாராப்புடன் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவும் மம்தாவுக்கு அழைப்புவந்திருப்பதாகத் தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications