போலீசாரை ஜெயலலிதா காட்டுமிராண்டிகளாக்கி விட்டார்-: பா.ம.க. குற்றச்சாட்டு
திண்டிவனம்:
கருணாநிதி கைது நடவடிக்கையில், முதல்வர் ஜெயலலிதா காவலர்களை காட்டுமிராண்டிகளாக மாற்றிவிட்டதாகபா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மதசார்பற்ற அதிமுக கூட்டணியிலிருந்து விலகியபின் பா.ம.க நடத்திய முதல் பொதுக்குழு கூட்டம் நேற்றுமாலை(சனிக்கிழமை), திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது.
அதில்,
சுயமரியாதை மற்றும் தன்மானம் கருதி, கூட்டணியிலிருந்து வெளியேறியதை பொதுக்குழு வரவேகிறது.
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தில், காவலர்களை ஏவிவிடட காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டிக்கிறது.
மத்திய அரசு தலையிட்டு போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரசுடன் ரகசிய உறவை ஏற்படுத்தி, பாண்டிச்சேரியில் பா.ம.க வை தோற்கடித்த அதிமுகவின்சந்தர்ப்பவாதபோக்கை கண்டிக்கிறது.
அடுத்த கட்டமாக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாசுக்கு அளிக்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பாட்டளி மக்கள் கட்சிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தரப்படாததால் தான் அக் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்துவிலகியது என்பது குறிப்பிடத்தக்கது. ராமதாஸ் தனது மகன் அன்புமணியை எம்.பியாக்க விரும்பினார், பின்னர்அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தாவி அன்புமணியை மத்தியஅமைச்சராக்கத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இதைப் புரிந்து கொண்ட ஜெயலலிதா பாட்டாளி மக்கள் கட்சிக்கு எம்.பி. பதவி தராமல் ஆப்பு அடித்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications