தாஜ்மகாலிடம் தோற்ற ராணுவ ஜெனரல்
ஆக்ரா:
என் வாழ்வில் இவ்வளவு அழகிய நினைவுச் சின்னத்தை (தாஜ்மகால்) பார்த்ததே இல்லை என்று கூறிய வண்ணம்தான் இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கினார் பாகிஸ்தான் அதிபரும் ராணுவஜெனரலுமான பர்வேஸ் முஷாரப்.
ஆக்ராவில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ள அமர் விலாஸ் ஹோட்டலின் அறையில் எந்த இடத்தில் நின்றுபார்த்தாலும் தாஜ்மகால் தெரியும். காலை தனது ஹோட்டல் அறையில் நுழைந்த அவர் ஒவ்வொரு இடத்திலும்நின்று தாஜ்மகாலின் ஒவ்வொரு கோணத்தையும் பார்த்து ரசித்தார்.
இது அவரது ராணுவ இறுக்கத்தைத் தளர்த்தி உற்சாக மூடுக்குக் கொண்டு வந்தது. காலர் இல்லாத சட்டை, பேண்ட்ஸ்என மிக கேஷூவல் உடைக்கு மாறினார் முஷாரப்.
வாஜ்பாய் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தவுடன் தனக்கு அரசு அருமையான ஹோட்டல் அறையைை ஒதுக்கிக்கொடுத்ததற்கு வாஜ்பாய்க்கு நன்றி தெரிவித்தார்.
வாஜ்பாயுடன் முஷாரப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது மனைவி ஷெபாஆக்ராவின் முக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான பதேபூர் சிக்ரியைப் பார்வையிட்டார். மிக ஆர்வத்துடன்அந்த இடத்தை வலம் வந்தார்.
வாஜ்பாயும் முஷாரபும் பேசிக் கொண்டிருந்தபோது இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தனியேசந்தித்துப் பேச்சுவார்ததை நடத்தினர்.
வாஜ்பாய், முஷாரப், பாகிஸ்தான் அமைச்சர்கள், இந்திய அமைச்சர்கள் என பெரும் தலைகள் ஆக்ராவில்முகாமிட்டிருப்பதால் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர், தேசியப் பாதுகாப்புப் படையினர்,போலீசார் ஆகியோர் படு டென்சனில் உள்ளனர்.
ராணுவ மருத்துவனைகள், பெரிய தனியார் மருத்துவனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தத்தலைவர்களின் பிரிவைச் சேர்ந்த ரத்தமும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வண்டிகள்,ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன.
பேச்சுவார்த்தை நடக்கும் இடத்தின் அருகே தான் யமுனை நதி ஓடுகிறது. இங்கு பல நாட்களாக இரவு பகலாகபடகுகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இப்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்நிலையிலும் ராணுவ ஹெலிகாப்டர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications