ஸ்டாலின் நெருங்கிய நண்பர் குடும்பத்துடன் தற்கொலை
சென்னை :
சென்னை மேயர் மு.க. ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரும் மாநகராட்சி காண்ட்ராக்டருமான அண்ணாநகர்ரமேஷ் தனது மனைவி, குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
ரமேஷ், அவரது மனைவி காஞ்சனா, மற்றும் 3 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார். மகள்கள் 10, 9, 1வயதானவர்கள்.
திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னை மாநகராட்சியில் கொடி கட்டிப் பறந்தவர் ரமேஷ். ஸ்டாலினுக்கு மிகநெருக்கமானவர் இவர். மாநகராட்சி டெண்டர்கள், காண்ட்ராக்ட்களைப் பெற இவரைப் பார்த்தால் போதும் என்றஅளவுக்கு அதிகாரம் கொண்டவராக இருந்தார்.
மாநகராட்சியில் மேயரின் காருக்கு அருகே தான் இவரது கார் நிற்கும். மாநகராட்சி கமிஷ்னரின் காரை நிறுத்தஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தான் இவரது கார் நிற்கும். அந்த அளவுக்கு அங்கு அதிகாரத்துடன் திகழ்ந்தார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவரைத் தான் அரசு முதலில் குறி வைத்தது. இவரிடம் விசாரித்தால்தான் ஸ்டாலின் சொத்துக்கள் குறித்த முழு விவரமும் கிடைக்கும் என போலீஸ் கருதியது.
எப்படியாவது இவரிடம் இருந்து ஸ்டாலினுக்கு எதிராக வாக்குமூலம் வாங்கிவிடத் திட்டமிட்டிருந்தது. ஆனால்,அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைப் போலீசார் தேடி வந்தனர்.
இந் நிலையில் திடீரென அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிரிச்சியைஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை குறித்து தகவலறிந்ததும், போலீசார் அண்ணாநகரிலுள்ள ரமேஷ் வீட்டுக்கு விரைந்து சென்றுபிரேதங்களைக் கைப்பற்றிப் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, தற்கொலைக்காண காரணங்கள் இதுவரை தெரியவில்லை. அவர்கள்அனைவரும் விஷம் அருந்தியிருக்கலாம். இந்தத் தற்கொலை சம்பவம் ஒரே மர்மமாக உள்ளது என்றனர்.
இவரது கார் அடிக்கடி மேயரின் கார் நிற்க வேண்டிய இடத்தில் நிற்க வைக்கப்படுகிறது என்று கூறி எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் மாநகராட்சி மன்றத்தில் சர்ச்சையை கிளப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.
மேம்பால ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக முன்னாள் எம்.பி. பரசுராமனுடன் சேர்ந்து காண்டிராக்டர்ஒருவரை பலவந்தமாகக் கடத்தியதாகவும் ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications