காங்கிரசில் சேருவாரா வாழப்பாடி ராமமூர்த்தி?
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிகளை இணைக்கும் முயற்சியில் அக் கட்சியின் மாநிலத்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவரும் தமிழக ராஜிவ் காங்கிரஸ் தலைவருமானவாழப்பாடி ராமமூர்த்தியை மீண்டும் காங்கிரசில் சேர்க்க அவர் முயற்சிமேற்கொண்டுள்ளார்.
மதுரையில் நடந்த ஐ.என்.டி.யூ.சி மாநாட்டின்போது பிரிந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள்அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று வாழப்பாடி ராமமூர்த்தி முன்னிலையில்அழைப்பு விடுத்தார் இளங்கோவன்.
முதல் கட்டமாக வாழப்பாடி ராமமூர்த்தியை காங்கிரசுக்கு திரும்ப கொண்டு வர முயன்றுவருகிறார். வாழப்பாடி ராமமூர்த்தியும் அதற்கு தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
வாழப்பாடி ராமமூர்த்தியை மீண்டும் காங்கிரசில் சேர்க்க காங்கிரஸ் தலைவர் சோனியாவும்பச்சைக் கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாசுக்கு இணையான வன்னியர்தலைவர்என்பதால் வாழப்பாடி ராமமூர்த்தி வரவு லாபம்தான் என கணக்கு போடுகிறதாம்காங்கிரஸ்.
மூப்பனாரை எப்படி காங்கிரசுக்கு இழுப்பது என்ற கவலையில் உள்ளார் இளங்கோவன்.இருப்பினும், சோனியா வேண்டுகோள் விடுத்தால் காங்கிரசில் இணைவது குறித்து தமிழ்மாநில காங்கிரஸ் பரிசீலிக்கும் என்று இளங்கோவன் நம்புகிறார்.
மூப்பனாருக்கும் வாழப்பாடி ராமமூர்த்திக்கும் எப்போதுமே ஒத்து வந்ததில்லை. முனபுமூப்பனாரும் வாழப்பாடியும் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும் இருவரும் எப்போதுமேமுகம் பார்த்துக் கூட பேசிக் கொண்டது கிடையாது.
1989ம் ஆண்டு தமிழத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றுமண்ணைக் கவ்வியபோது எரிச்சலடைந்த அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜிவ்காந்தி, மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மூப்பனாரை நீக்கிவிட்டு வாழப்பாடிராமமூர்த்தியைத் தலைவராக்கினார்.
அப்போது ஐ.என்.டி.யு.சி. தொழிலாளர் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகமிகத் தீவிரமாக செயல்பட்டு வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. தான் பதவியில்ல் இருந்த 7ஆண்டுகளும் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு எதிராகவும் ஆதரவாகவும்அறிக்கைகள் விட்டே பரபரப்பான அரசியல் நடத்தியவர் வாழப்பாடி.
1996ம் ஆண்டில் நரசிம்மராவ் ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டபோது அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே கட்சிக் கொடியைஅரைக் கம்பத்தில் பறக்கவிடுவேன் என்று பிரதமரையே மிரட்டியவர். இதனால், இவரைகட்சியிலிருந்து நீக்கினார் நரசிம்மராவ்.
பின்னர் என்.டி.திவாரி-அர்ஜூன் சிங் துவங்கிய திவாரி காங்கிரசில் சேர்ந்தார். பின்னர்அவர்களிடம் இருந்தும் விலகி தமிழக ராஜிவ் காங்கிரசை உருவாக்கினார்.
இப்போதும் அந்தக் கட்சியை நடத்தி வருகிறார். அதிமுகவுடனும் ஒரு முறை கூட்டணிவைத்தார். எம்.பியானார். மத்திய அமைச்சருமானார். பின்னர் திமுகவுடன் கூட்டணிவைத்தார்.
இப்போது யார் கூட்டணியிலும் அவர் இல்லை.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications