இந்தியா-பாகிஸ்தான் பேச்சு தோல்வி
ஆக்ரா:
ஆக்ராவில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.
கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை வரை நீண்டன. இந்தியப் பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் அதிபர்பர்வேஸ் முஷாரபும் பல்வேறு 4 முறை தனியே சந்தித்துப் பேசினர்.
அதே போல இந்திய-பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பல முறை சந்தித்துப் பேசினர்.
இவர்கள் தவிர பாகிஸ்தான் தூதுக்குழுவினரும் இந்திய அதிகாரிகளும் ஒரு பக்கம் இரவு பகலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தையே பேசிக் கொண்டிருந்தது. காஷ்மீர் எங்களது உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறியஇந்தியா இது குறித்து பாகிஸ்தானுடன் பேச விரும்பவில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டது.
அதே சமயம் காஷ்மீரில் செயல்பட்டுவரும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவமும் அரசும் ஆயுதங்களையும் பயிற்சியும் அளித்து வருவதைநிறுத்த வேண்டும். இது குறித்து மட்டுமே உங்களுடன் பேச இந்தியா தயாராக உள்ளது என்று வாஜ்பாய் தெளிவாகக் கூறிவிட்டார்.
இதனால், இரு தரப்பிலும் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தனர். இரு தலைவர்களும் சேர்ந்து கூட்டுப் பிரகடனம் வெளியிட முடியாதஅளவுக்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரும் கருத்து வேறுபாடுகள் நிலவின.
இதையடுத்து வாஜ்பாய்-முஷாரப் இருவரும் கையெழுதிட்ட ஒரு அறிக்கை வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதிலும் கூட இருதலைவர்களுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டியாவது அளிக்கலாம் எனத் திட்டமிட்டனர். ஆனால், அங்கும் காஷ்மீர்குறித்துத் தான் பேசுவேன் என்று பர்வேஸ் முஷாரப் கூறினார். அப்படியானால், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதம் குறித்துத் தான் நான்பேசுவேன் என வாஜ்பாய் கூற அங்கும் கருத்து வேறுபாடு தலை தூக்கியது.
இதனால், எந்தவிதமான அறிக்கையோ, பத்திரிக்கையாளர் சந்திப்போ இல்லாமல் பர்வேஸ் முஷாரப் திங்கள்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான்திரும்பினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications