லே-ஆப்: பன்னாட்டு நிறுவனங்கள் மீது கம்யூனிஸ்ட் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய பொருளாதாரக் கொள்கையால் பன்னாட்டுக் நிறுவனங்களுக்குத் தான் லாபம் என்று சி.ஐ.டி.யு செயலாளர்வரதராஜன் கூறியுள்ளார்.

இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) மாநாடு புதன்கிழமை சென்னையில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய வரதராஜன் கூறியதாவது,

நாளுக்கு நாள் புகுத்தப் படும் புதிய முறைகளினால் லாபமடைவது பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான். தொழில்மறுமலர்ச்சியால் பாதிப்படைவது தொழிலாளர்கள் தான்.

இதனால், முதலில் லே ஆப், அடுத்து ஆட்குறைப்பு, அதற்கடுத்து ஆலையை மூடல் என்று முடிவில் பாதிக்கப்படுவதுதொழிலாளர்கள் தான். பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பைத்தான் அதிகரித்து வருகின்றன.

வேலைவாய்ப்பு கொடுக்கும் நிறுவனங்களில் மிகக்குறைவான சம்பளம் கொடுக்கப்படுகிறது. தானாக முன்வந்துஓய்வு பெறுதல், திறமை மிகுந்தவர்களைக் குறைத்து அதிகம் படிக்காதவர்களை வேலைக்கு அமர்த்துதல்போன்றவற்றால் லாபமடைவது பெரிய நிறுவனங்கள் தான்.

உதாரணமாக, தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் 74 சதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகவும், 20 சதம் ஓய்வுஊதியமாகவும் வழங்கப்படுகிறது.

எஞ்சிய 6 சதம்தான் விவசாயம் போன்ற தொழில்களின் வளர்ச்சிக்காக செலவிடப்படுகிறது. இதே நிலைதான்மத்திய அரசிலும் நிலவுகிறது. இந்நிலை நீடித்தால் தொழிலாளர்களின் நிலை படு மோசமாகி விடும்.

இவ்வாறு அந்த மாநாட்டில் வரதராஜன் கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+