இலங்கை கிரிக்கெட் தொடர் இன்று துவக்கம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் 3 நாடுகள் பங்கேற்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
இன்றய ஆட்டத்தில் இலங்கையும் நியூஸிலாந்தும் மோதுகின்றன. வரும் 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்தியாமற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடனும் தலா 3 ஆட்டங்களில் ஆடும். இறுதிப் போட்டிஅடுத்த மாதம் 5ம் தேதி நடக்கவுள்ளது.
சோனி மேக்ஸ் டிவி இந்தப் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகிறது.
அனைத்துப் போட்டிகளையும் நமது தமிழ் இன்டியா இண்போவிலும் பால்-பை-பால் கமெண்ட்ரியுடன்போட்டியை ரசிக்கலாம்.
இன்றைய போட்டி இந்திய நேரப்படி பகல் 1.45 மணிக்குத் தொடங்கும். 1.45 மணி முதல் போட்டியை இன்டியாஇண்போவும் பால்-பை-பால் கமெண்ட்ரியுடன் வழங்கும்.












Click it and Unblock the Notifications