காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5தீவிரவாதிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப் பட்டனர். மேலும் 6 தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டனர்.

கடந்த புதன்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவிலுள்ள பாமி என்ற இடத்தில் தனி போலீஸ் படை மீதுதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். போலீஸ் படை பதிலுக்குத் தாக்கியதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

இதேபோல் பந்திப்போராவிலுள்ள துராமா என்ற இடத்தில் நடந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.மேலும் பலர் காயமடைந்தனர். தப்பி ஓடிய தீவிரவாதிகளைப் பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில்இறங்கியுள்ளனர்.

மேலும், பாராமுல்லாவில் தீவிரவாதிகள் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்புப் படையினர் செயலிலக்கச்செய்தனர். இதனால் பெரிய ஆபத்துத் தவிர்க்கப் பட்டது.

மேலும் பந்வான் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் 2 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றனர்.அவர்களிடமிருந்த துப்பாக்கிகள், ஆர்டிஎக்ஸ் மருந்துகள் மற்றும் 20 ஆயிரம் பணம் கைப்பற்றப் பட்டன.

கடந்த 2 நாட்களில் காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 6 தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+