இலங்கை: எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம், பேரணி
கொழும்பு:
நாடாளுமன்றக் கூட்டத்தைத் திடீரென்று முடித்து வைத்ததை எதிர்த்து, இலங்கை எதிர்க்கட்சியினர் வியாழக்கிழமைகாலையில் தடையை மீறி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்குள், மறு தேதியைக் குறிப்பிடாமல்கடந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை திடீரென்று ஒத்தி வைத்தார் இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா.
இதனால் எதிர்க்கட்சியினர் அனைவரும் கொந்தளித்தனர். கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்ற வாசலில்போடப்பட்டிருந்த அனைத்துப் பாதுகாப்புத் தடைகளையும் மீறி அவர்கள் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள்புகுந்தனர். அன்றைய கூட்டத்தையும், ஆளுங்கட்சி இல்லாமலேயே நடத்தினர் (?).
இந்நிலையில், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு கோரி எதிர்க்கட்சியினர் வியாழக்கிழமை கண்டனப்பேரணி ஒன்றை நடத்த முடிவு செய்தனர். ஆனால், அவர்கள் பேரணியை நடத்த விடாமல், கொழும்பு முழுவதும்பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆனாலும், தடைகளை எல்லாம் மீறிய எதிர்க்கட்சியினர், கண்டனப் பேரணியைத் தொடங்கினர். தொடர்ந்து,அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆனால், பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் தொடர்ந்து நடத்த விடாமல் போலீசார் எவ்வளவோ தடுத்துப்பார்த்தனர். ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியினர், போலீசார் மீது கல்வீச ஆரம்பித்தனர்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக்கலைத்தனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பதட்டம் நிறைந்து காணப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications