சன் டி.வி. மீது நடவடிக்கை கோரி கோர்ட்டில் மனு
சென்னை:
முன்னாள் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கைது செய்யப்பட்டது தொடர்பாக சன் டி.வி.ஒளிபரப்பிய காட்சிகள் மக்களை வன்முறைக்கு தூண்டும் விதத்தில் அமைந்திருந்த காரணத்தால், அந்த டி.வி.நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த எம்.எம்.கே. முகமது இப்ராஹிம் என்பவர் தாக்கல் செய்த அந்தமனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த மாதம் 29ம் தேதி நான் சென்னைக்கு வேலை சம்பந்தமாக வந்திருந்தேன். நான் மண்ணடியில் உள்ளமேன்சன் ஒன்றில் தங்கி இருந்தேன். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி போலீசாரால் கைது செய்யப்பட்டுநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட காட்சி சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
அதிகாலை 1.30 மணி முதல் காலை 6.30 வரை நடந்த சம்பவத்தில் சில குறிப்பிட்ட காட்சிகளை மட்டுமே சன் டிவிமீண்டும் மீண்டும் ஒளிபரப்பி வந்தது.
ஆனால், போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட கேசட்டில் கருணாநிதி போலீடசாருடன் ஒத்துழைத்த சம்பவம்ஒளிபரப்பட்டது. அதன் பின் முரசொலி மாறன் வந்த பின் கருணாநிதி ஒத்துழைக்க மறுப்பதும், இதில்,சி.பி.சி.ஐ.டியின் டி.ஜி.பி. முகமது அலி தாக்கப்படுவதும் காட்டப்பட்டது.
மேலும், நீதிபதியின் வீட்டிற்கு கருணாநிதியை அழைத்துச் செல்லும் காரில் முரசொலி மாறன் ஏறிக் கொண்டு மாறன்ஏற மறுப்பதும், அவரை போலீசார் அப்புறப்பட்டுத்தும் போது அவர் போலீசாரை காலால் உதைத்தும், கைகளால்தாக்குவதும் காட்டப்பட்டது.
அதன் பின் அவர் தன் கார் மூலம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் சென்று, அலுவலக கதவுகளை கார் மூலம் முட்டி திறக்கவைக்கிறார். இவை எல்லாம் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட கேசட்டில் உள்ளன.
ஆனால் சன் டிவி குறிப்பிட்ட சில காட்சிகளை மட்டுமே காட்டியது. கருணாநிதி கைது செய்யப்பட்ட போதுவன்முறை நடந்ததாக கூறி அதற்கு சாதகமாக இருக்கும் காட்சிகளை எடிட் செய்து காட்டியது. போலீசார்தாக்கப்பட்ட காட்சிகளை சன் டிவி நீக்கிவிட்டது.
இந்தக் காட்சிகளைப் பார்த்த மக்கள், தமிழக அரசின் மீதும், ஜெயலலிதாவின் மீதும் வெறுப்படைய வேண்டும்என்ற நோக்கத்தில் இவை சன் டி.வியில் ஒளிபரப்பப்பட்டன.
இந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டது.அரசுக்கு எதிரான காட்சிகளை மட்டுமே ஒளிபரப்பிய சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான்பி-1 காவல் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் இதற்கு எந்த விதமான பதிலும் இல்லை.
இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் முகமது இப்ராஹிம்.
சன் டிவி சார்பில் ஆஜரான வக்கீல் அசோகன், "இது போன்ற மனுவை தனிப்பட்ட எவரும் தாக்கல் செய்ய முடியாது.எனவே இந்த மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது" என்று வாதாடினார்.
ஆனால் இப்ராகீம் சார்பில் வாதாடிய வக்கீல் சிராஜுதீன், "தனிப்பட்டவர் இது போன்று மனு தாக்கல் செய்யலாம்என்பதால் இந்த மனுவை ஏற்க வேண்டும்" என வாதாடினார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி மலை சுப்ரமணியம், இதுகுறித்து பதில் அளிக்கும்படிதிருவல்லிக்கேணி பி 1 காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications