முன்னாள் டி.ஜி.பி. க்கு முன் ஜாமீன் கிடைத்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முன்னாள் டி.ஜி.பியான எப்.சி. சர்மாவுக்கு முன் ஜாமீன் அளித்து சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றநீதிபதி அசோக்குமார் தீர்ப்பளித்தார்.

1999ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் கைதிகள் போலீசாரால்கொடுமைப்படுத்தப் பட்டதாகவும், தாக்கப் பட்டதாகவும் ப்ரீத்தி பாஸ்கர் என்பவர் புகார் மனு கொடுத்தார்.

ப்ரீத்தி பாஸ்கர் தனது புகார் மனுவில் கூறியிருந்ததாவது:

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா அரசை திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காக, தமிழகசிறைகளில் இருக்கும் முஸ்லிம் கைதிகள் கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தாக்கப்பட்டனர்.

இது குறித்த திட்டம் 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கருணாநிதிதலைமையில் நடைபெற்றது. இதில் பல உயர் போலீஸ் அதிகாரிகளும், சிறைத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தில் தீட்டப்பட்ட திட்டத்தின்படி, 1999ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தின் பல சிறைகளிலும்அடைக்கப்பட்டிருந்த முஸ்லிம் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று தன் மனுவில் ப்ரீத்தி பாஸ்கர்கூறியிருந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படிபோலீசார் முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி மற்றும் பலர் மீது முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்) பதிவு செய்தனர்.

இதில் கருணாநிதி தவிர முன்னாள் டி.ஜி.பியான எப்.சி. சர்மா மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும். தனக்கு முன் ஜாமீன் வழங்கவேண்டும் எனவும் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்த்தில் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அசோக்குமார்,சர்மாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இந்த மாதம் 19ம் தேதிக்கு(வியாழக்கிழமை) ஒத்தி வைத்தார்.

இன்று மீண்டும் இந்த மனு மீதான விசாரனையை நடத்திய நீதிபதி அசோக்குமார், முன்னாள் டி.ஜி.பி., சர்மாவுக்குமுன் ஜாமீன் அளித்து தீர்ப்பளித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+