பரபரப்பான விசாரணைக்கு தயாராகிறது ராமன் கமிஷன்
சென்னை:
தி.மு.க.தலைவர் கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டபோது நடந்த போலீஸ் முறைகேடுகள் குறித்துவிசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ராமன் கமிஷன் தனது விசாரணையை ஆரம்பிக்கஉள்ளது.
மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்தது தொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதிகைது செய்யப்பட்டார் அப்போது போலீசார் அவரிடம் முரட்டுத்தனமாக நடந்ததாககுற்றம் சாட்டப்பட்டது.
கருணாநிதி கைது செய்யப்பட்டபோது போலீசாரை கடமையை செய்ய விடாமல்தடுத்தனர் என குற்றம் சாட்டப்பட்டு மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் கைது செய்யப்பட்டனர்.
கருணாநிதி கைது செய்யப்பட்டபோது முறைகேடாக நடந்து கொண்ட போலீசார் மீதுமாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
இதை அடுத்து இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் தலைமையில்விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது தமிழக அரசு.
இந்த விசாரணை கமிஷன் தற்போது தன் விசாரணையை தொடங்கி உள்ளது. கமிஷன்வெளியிட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது:
முதல் கட்டமாக கருணாநிதி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தரப்பை விளக்கிஅபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த அபிட்விட்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும். அவர்கள்கமிஷன் முன் ஆஜராவதற்கு நோட்டீஸ் அனுப்பப்படும். கமிஷன் குறிப்பிட்ட தேதியில்அவர்கள் கமிஷன் முன் ஆஜராக வேண்டும்.
கமிஷன் விசாரணையை விரைந்து முடிக்க விரும்புவதால் இந்த வழக்கில்சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
கமிஷன் முன் சாட்சி கூறும் அனைவருக்கும் தக்க பாதுகாப்பு அளிக்கப்படும் எனகூறப்பட்டுள்ளது.
ராமன் கமிஷன் விசாரணை அரசுக்கு சாதகமாகத்தான் அறிக்கை வெளியிடும் என்றுகூறி இந்த விசாரணைையை புறக்கணிக்க போவதாக கருணாநிதி அறிவித்துவிட்டதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
