சிவாஜி பெற்ற விருதுகள்

Subscribe to Oneindia Tamil

சிவாஜி பல மதிப்புமிகுந்த விருதுகள் வாங்கியுள்ளார்.

இந்த விருதுகளால் அவருக்கும் பெருமை, அவருக்குக் கொடுக்கப் பட்டதால் அந்த விருதுகளுக்கும் பெருமைஎன்று சொல்வார்கள்.

1960களில் வெளிவந்து வெற்றிகரமாகவும், பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஓடிய "வீரபாண்டியகட்டபொம்மன்" திரைப்படத்தில் நடித்ததற்காக "ஆஃப்ரோ-ஏசியன் சிறந்த நடிகர்" விருதை சிவாஜிக்கு வழங்கிபெருமையடைந்து புகழைக் கொடுத்தது எகிப்து அரசு.

1962-ல் அவரை ஒரு கலைத் தூதராக அழைத்து பெரும் கவுரவத்தைக் கொடுத்தது அமெரிக்க அரசு.

1966-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கிக் கவுரவித்தது இந்திய அரசு.

1984-ம் ஆண்டு பத்மபூஷன் விருது, ஆகிய 2 விருதுகளும், இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கிகெளரவிக்கப்பட்டது.

1986-ம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வழங்கியது.

1992-ம் ஆண்டு சிறப்பு ஜூரி விருது, அவர் நடித்த "தேவர்மகன்" படத்திற்காக மத்திய அரசு வழங்கியது.

1993-ம் ஆண்டு ஆதித்தனார் தங்கப் பதக்க விருது, ஆதித்தனார் முத்தமிழ்ப் பேரவை வழங்கியது.

1993-ம் ஆண்டு "தினாநாத் மங்கேஷ்கர் புரஷ்கார்", பாடகி லதா மங்கேஷ்கர் அறக்கட்டளை வழங்கியது.

1993-ம் ஆண்டு "சாந்தோம் சிறப்பு விருது", தமிழ்நாடு பிஷப் கவுன்சில் வழங்கியது.

"ரோட்டரி சங்கம் கெளரவ விருது", சென்னை, கோயம்புத்தூர்,திருச்சி ஆகிய 3 நகரங்களில் வழங்கப் பட்டன.

1995-ம் ஆண்டு மும்பையில் நடந்த 26-வது "சர்வதேச படவிழாவில் தலைமைவிருந்தினராக" அழைக்கப் பட்டார்.

1995-ம் ஆண்டு "செவாலியே", விருது பிரான்ஸ் நாடு வழங்கியது.

1995-ம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம் "கொலம்பஸ் நகர கெளரவக்குடிமகனாக" அந்நகர மேயரால்அநிவிக்கப் பட்டார்.

அதே நாளில் அங்கு தொடங்கப் பட்ட "கொலம்பஸ் தமிழ்ச்சங்க" த்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இவை தவிர, சிவாஜி கணேசன் நடித்து வெற்றிகரமாக ஓடி, தமிழக திரைப்பட வரவாற்றுக்கே திருப்புமுனையைஏற்படுத்திய கொத்தமங்கலம் சுப்புவின் "தில்லானா மோகனாம்பாள்" திரைப்படத்தின் டெலிகிராப்ஸ் ரைட்முழுவதையும் ஹாலிவுட்டின் மிகப்பெரும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான 20th Centrury Box நிறுவனம்வாங்கிப் பெருமை சேர்த்தது.

இது தவிர, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் அவருடைய படங்கள் பலப்பல.அவருடைய திரையுலகச் சாதனையை ஒவ்வொரு படமும் எடுத்துச் சொல்லும் என்பதிலும் ஐயமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+