For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடிகர் சிவாஜி கணேசன் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சனிக்கிழமை இரவு 7.20 மணிக்கு இறந்தார்.

மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 10 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74.

கடந்த சில நாட்களாக செயற்கை சுவாசம் மூலம் தான் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் இறந்தபோதுமகனும் நடிகருமான பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அவர் அருகில் தான் இருந்தனர்.

1927ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்தவர் சிவாஜி கணேசன். 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X