சிவாஜி கடந்த மைல் கல்கள்
சிவாஜியின் முதல் படம் "பராசக்தி", கடைசிப் படம் "மன்னவரே சின்னவரே". தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.
ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்ட முதல் தமிழ்ப் படம் சிவாஜி 3 வேடங்களில் நடித்த "தெய்வ மகன்".
சிவாஜி நடித்த "நவராத்திரி" படத்தைப் பார்த்த அப்போதைய இந்தி முன்னணி நடிகர்கள், இதுபால 9 வேடங்களில் தங்களால் நடிக்க முடியாது என்று ஒப்புக் கொண்டனர்.
பல விருதுகள் பெற்ற சிவாஜி, இந்தியத் திரையுலகின் முக்கிய விருதான நடிப்புக்காக தேசிய சிறந்த நடிகர் விருதை மட்டும் பெறாதது துரதிர்ஷ்டமானது. இங்கே வடக்கு-தெற்கு 'பாலிடிக்ஸ்' விளையாடியது.
கட்டபொம்மன் எப்படி இருப்பான் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தவர் சிவாஜி.
அமெரிக்காவிலுள்ள கொலம்பஸ் நகரின் கெளரவ மேயராக ஒரு நாள் இருந்திருக்கிறார் சிவாஜி.
தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் 100 நாட்களுக்கு மேலாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி சாதனை சாதனை படைத்தது சிவாஜி நடித்த "பைலட் பிரேம்நாத்".
தான் ஏற்கும் கதாபாத்திரத்திற் கேற்ப குரலையும், முகபாவத்தையும் மாற்றிக் கொள்வது சிவாஜியால் மட்டுமே முடிந்தது.
சிவாஜியும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் சேர்ந்து நடித்த ஒரே படம் "கூண்டுக்கிளி".
சிவாஜியுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் "பத்மினி".
சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்தவர்கள் மொத்தம் 49 நடிகைகள்.
தமிழ்த் திரையுலகில் கதாநாயகர்கள் பாட்டுப் பாடிக் கொண்டிருந்த காலத்தில், அட்சர சுத்தமாக தமிழில் பேச வைத்தவர் சிவாஜிதான். இவரது படங்கள் மூலம் தமிழகத்தில் பேச்சு, வசனம் ஆகியவை பிரபலமானது என்றால் மிகையில்லை.
சிவாஜி நடிக்க விரும்பி முடியாமல் போன ஒரே வேடம், 'தந்தை பெரியார்'.
எனக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப் படாததற்கு நான் தமிழனாகப் பிறந்ததுதான் காரணம் என்று சிவாஜியே ஒரு முறை ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
கமலுடன் சேர்ந்து கடைசியாக நடித்த படம்"தேவர் மகன்", ரஜினியுடன் சேர்ந்து நடித்த கடைசிப் படம்'படையப்பா".
சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது "தேவர்மகன்" படத்திற்குக் கிடைத்தது.
நேரம் தவறாமைக்குப் பெயர் போனவர் சிவாஜி.
தாதாசாஹேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழர் சிவாஜி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications