• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவாஜியின் உடல் தகனம்

By Staff
|

சென்னை:

நடிகர் சிவாஜி கணேசனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இன்று (திங்கள்கிழமை) பகல் 12.30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.

முன்னதாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மாநில போலீசார் அணிவகுப்புமரியாதை செலுத்தினர். வானை நோக்கி 10 முறை துப்பாக்கியால் சுட்டும் அவருக்கு மரியாதை செலுத்தினர்.போலீசாரின் இசைக் குழுவினரும் சோககீதம் இசைத்தனர்.

இலங்கை அரசின் சார்பில் கலாச்சாரத்துறை அமைச்சர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் அதிபர்சந்திரிகாவின் இரங்கல் கடிதத்தை மயானத்திலேயே வாசித்தார்.

இதன் பின்னர் சிவாஜியின் உடலை மின் மயான எரியூட்டும் அடுப்புக்குள் அவரது மகன்கள் ராம்குமார், பிரபுஆகியோர் வைத்தனர். இதையடுத்து அவரது உடல் எரியூட்டப்பட்டது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X